பிப்ரவரி 27, பெங்களூர் (Sports News): டாடா டபிள்யுபிஎல் பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's Premier League 2025) போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதுவரை போட்டித்தொடரில் 11 ஆட்டங்கள் நிறைவுப் பெற்றுள்ள நிலையில், 12 வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இரவு 07:30 மணியளவில், பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெறும் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - குஜராத் ஜெயிண்ட்ஸ் (Royal Challengers Bengaluru Vs Gujarat Giants) அணிகள் மோதுகின்றன. குஜராத் மண்ணில் பெங்களூர் வென்றதற்கு இன்று குஜராத் அணி பழிதீர்க்குமா? அல்லது சொந்த மண்ணில் 2 தோல்வியை அடைந்த பெங்களூர், இன்றாவது வெற்றி அடையுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

டாஸ் வென்ற குஜராத்:

இந்நிலையில், பெங்களூர் அணியின் கேப்டன் டாஸ் சுழற்ற, குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஆஷ் கார்டனர், பௌலிங் தேர்வு செய்துள்ளார். இதனால் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய தயாராகி இருக்கிறது. டாஸ் வென்றால் பௌலிங் தேர்வு செய்து, பேட்டிங்கில் பிக்கப் செய்யலாமா? என எண்ணி காத்திருந்த பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

பெங்களூர் - குஜராத் அணி வீரர்கள் விபரம் (Bangalore Vs Gujarat Match Today Squad Update):

இன்றைய போட்டியில் குஜராத் அணியின் சார்பில் பென் மூனே, போபே லிட்சிபைடு, தயாளன் ஹேமலதா, ஹர்லீன் டியோல், ஆஷ் கார்ட்னர், தேந்திர தோட்டின், கஷ்வீ கெளதம், தனுஜா கண்வீர், மேக்னா சிங், பிரியா மிஸ்ரா, பாரதி புல்மலி ஆகியோர் விளையாடுகின்றனர். அணியை ஆஷ் கார்ட்னர் (Ash Gardner) வழிநடத்துகிறார். ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) தலைமையிலான பெங்களூர் அணியில் டேனி வாட், எலிசி பெர்ரி, ராகவி பிஸ்ட், ரிச்சா கோஷ், கனிகா அனுஜா, ஜியார்ஜ் வார்ஹம், கிம் கார்த், ஸ்நேஹ் ராணா, பிரேமா ராவத், ரேணுகா சிங் தாகூர் விளையாடுகின்றனர்.

டாஸ் வென்று குஜராத் பௌலிங் தேர்வு:

குஜராத் அணியின் சார்பில் களமிறங்கும் வீரர்கள்:

ஆர்சிபி Vs குஜராத் போட்டியில், பெங்களூர் அணியின் சார்பில் விளையாடவுள்ள வீரர்கள்: