Deepti Sharma & Meg Lanning (Photo Credit: wplt20.com)

பிப்ரவரி 19, வதோதரா (Sports News): குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா, பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில், பெண்களுக்கான டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (TATA Women's Premier League) போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தமாக 25 ஆட்டங்கள் நடைபெறும் டாடா டபிள்யுபிஎல் 2025 (TATA WPL 2025) ஆட்டத்தில், நடைபெற 5 போட்டிகளில், 2 போட்டிகளில் பங்கேற்று இரண்டிலும் வெற்றியடைந்த பெங்களூர் அணி, புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகள், என்.ஆர்.ஆர் புள்ளிகள் +1.440 (WPL Points Table Today) முதல் இடத்தில் இருக்கிறது. தான் எதிர்கொண்ட 2 போட்டியில் ஒன்றில் வெற்றி அடைந்து மும்பை அணி இரண்டாவது இடத்தில 2 புள்ளிகள், என்.ஆர்.ஆர் புள்ளிகள் +0.783 பெற்று இருக்கிறது.

இன்று டெல்லி - உபி பெண்கள் (Delhi Vs UP Warriorz Women's WPL 2025) அணிகள் மோதல்:

ஆறாவது நாளான இன்று உபி வாரியர்ஸ் (UP Warriorz Women's WPL 2025) - டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals Women's WPL 2025) அணிகள் மோதுகிறது. இன்று இரவு 07:30 மணியளவில் தொடங்கி நடைபெறும் ஆட்டத்தில், புள்ளிப்பட்டியலில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் இருக்கும் டெல்லி, உபி அணிகள் மோதிக்கொள்கின்றன. டெல்லி அணி தான் எதிர்கொண்ட 2 போட்டியில் ஒன்றில் வெற்றியும், உபி அணி தான் எதிர்கொண்ட ஒரே போட்டியில் தோல்வியும் என இறுதி இரண்டு இடங்களை தக்கவைத்து இருக்கிறது. இதனால் இரண்டு அணிகளும் இன்று வெற்றிக்காக போராடும். இந்த போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம்.

வீராங்கனைகள் விபரம்:

மேக் லின்னிங் (Meg Lanning) தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் பெண்கள் (Delhi Capitals Women's WPL T20 Squad) கிரிக்கெட் அணியில், ஜெமியா ரோட்ரிக்ஸ், நிகி பிரசாத், சபில் வர்மா, சினேகா தீப்தி, அலிஸ் காப்செ, அன்னபெல் சுதர்லேண்ட், அருந்ததி ரெட்டி, ஜெஸ் ஜானஸன், மரீசானே காப், மின்னு மணி, ஷிகா பாண்டே, நந்தினி காஷ்யப், சாரா ப்ரயஸ், தனியா பாட்டியா, ராதா யாதவ், திலஸ் சாது, என் சாரணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உபி வாரியர்ஸ் (UP Warriorz Women's WPL Squad 2025) அணியில் ஆருஷி ஜோயல், கிரண் நவ்கிரெ, ஸ்வேதா செஹ்ராவாத், விர்ந்தா தினேஷ், சமாரி அதப்பத்து, சினலே ஹென்றி, கிரேஸ் ஹாரிஸ், பூனம் கெம்னர், தஹியா மேக்ராத், உமா சேத்ரி, அஞ்சலி சர்வானி, கெளஹர் சுல்தானா, கிராந்தி காட், ராஜேஸ்வரி கெய்க்வாட், சல்மா தாகோர், சோபி எஸ்லேஸ்டோன், அலனா கிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை கேப்டனாக தீப்தி ஷர்மா (Deepti Sharma) வழிநடத்துகிறார்.

டாடா பெண்கள் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியல் (TATA WPL 2025 Points Table Today):

இன்றைய போட்டிக்கு தீவிரமாக தயாராகும் உபி பெண்கள் கிரிக்கெட் அணி:

போட்டிக்கு தயாராகும் டெல்லி கேபிட்டல்ஸ் பெண்கள் கிரிக்கெட் அணி: