Match 13: DC Vs MI | WPL 2025 (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 28, பெங்களூர் (Cricket News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's Premier League 2025) போட்டியில், இன்று 13 வது ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், இரவு 07:30 மணியளவில் தொடங்கியது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ததைத்தொடர்ந்து, மும்பை அணி பேட்டிங் செய்கிறது. இந்த ஆட்டத்தினை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி செயலி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். RCB Vs DC WPL 2025: சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வி.. ஆறுதல் வெற்றி கிடைக்குமா? பெங்களூர் Vs மும்பை ஆட்டம் அப்டேட் இதோ.!

மும்பை - டெல்லி பெண்கள் கிரிக்கெட் அணி (Mumbai Vs Delhi Women's WPL 2025):

மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians Squad) அணியின் சார்பில் ஹேலி மேத்யூஸ், யாஸ்திகா பாட்டியா, நடாலி ஸ்கிவர்-பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கவுர், அமேலியா கெர், அமன்ஜோத் கவுர், சஜானா எஸ், கமாலினி ஜி, சமஸ்கிருதி குப்தா, ஷப்னிம் இஸ்மாயில், ஜின்டிமணி கலிதா ஆகியோர் இன்று களமிறங்குகின்றனர். டெல்லி கேப்பிட்டல்ஸ் (Delhi Capitals Squad) அணியின் சார்பில் மெக் லானிங், ஷஃபாலி வர்மா, ஜெஸ் ஜோனாசென், ஜெமிமா ரோட்ரிக்ஸ், அனாபெல் சதர்லேண்ட், மரிசான் கப், சாரா பிரைஸ், நிகி பிரசாத், மின்னு மணி, டைட்டாஸ் சாது, ஷிகா பாண்டே ஆகியோர் இன்று களமிறங்குகின்றனர்.

டெல்லி அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு:

மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் விளையாடும் நபர்கள்:

டெல்லி - மும்பை அணியின் சார்பில் விளையாடும் வீரர்கள் விபரம்: