
மார்ச் 04, துபாய் (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் மறைந்த கிரிக்கெட் வீரர் பத்மகர் சிவல்கர் (Padmakar Shivalkar). இவர் தனது 84 வயதில், நேற்று (03 மார்ச் 2025) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முதல் தர கிரிக்கெட் வீரராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவர் 124 ஆட்டங்கள் விளையாடி இருக்கிறார். 34,054 பந்துகள் வீசி 589 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். 13 போட்டியில் 10 விக்கெட்டையும், 42 போட்டியில் 5 விக்கெட்டையும் வீழ்த்தி மிகப்பெரிய அளவிலான சாதனைக்கு சொந்தக்காரராக சிவல்கர் இருந்தார். IND Vs AUS Toss Update: டாஸ் வென்று ஆஸி., அணி பேட்டிங் தேர்வு.. வருணுக்கு மீண்டும் வாய்ப்பு.. வாழ்வா? சாவா? நிலையில் களமிறங்கும் அணிகள்.!
கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்:
இந்நிலையில், பத்மகர் சிவல்கரின் நினைவை போற்றும் விதமாகவும், இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் படைத்த சாதனையை உலகுக்கு பறைசாற்றும் பொருட்டும், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்றைய கிரிக்கெட் விளையாட்டில், கருப்பு பட்டை கைகளில் அணிந்து விளையாடுகின்றனர். துபாயில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டி, அரையிறுதி சுற்று இந்தியா - ஆஸ்திரேலியா (IND Vs AUS Cricket) அணிகள் இடையே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ பத்மகர் ஷிவல்கர் நினைவாக கருப்பு பட்டை அணிந்து இந்திய அணி விளையாடுவது ஹோடர்பான அறிவிப்பு:
In honour of the late Shri Padmakar Shivalkar, Team India is wearing black armbands today.
— BCCI (@BCCI) March 4, 2025