Match 13: IND Vs AUS Champions Trophy 2025 | Semi Final | Toss Update (Photo Credit: @ICC X)

மார்ச் 04, துபாய் (Cricket News): துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) மோதும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 அரையிறுதி முதல் போட்டி நடைபெறுகிறது. ரோஹித் சர்மா டாஸ் சுழற்றிய நிலையில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி பௌலிங் செய்ய காத்திருக்கிறது. அரையிறுதி சுற்று இரண்டு அணிகளுக்கும் வாழ்வா-சாவா? ஆட்டம் என்பதால், இன்றைய போட்டி மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ச்சியாக 11 முறை இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா டாஸ் தோற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. IND Vs NZ Highlights: இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் ட்ராபி 2025: வருண், குல்தீப், ஷ்ரேயாஸ் அசத்தல் ஆட்டம்.! இந்தியா திரில் வெற்றி.! 

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதல் (Ind Vs Aus Cricket):

ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில், ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுகின்றனர். ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் டிராவிஸ் ஹெட், கூப்பர் கோனொலி, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, க்ளென் மேக்ஸ்வெல், பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், தன்வீர் சங்கா, ஆடம் ஜம்பா ஆகியோர் விளையாடுகின்றனர்.

மீண்டும் வருணுக்கு வாய்ப்பளித்த இந்திய அணி:

இன்றைய ஆட்டத்தில் ஆஸி அணியில் கூப்பர் மேட் ஷார்ட்டுக்காக மாற்றப்பட்டுள்ளார். இந்திய அணி மாற்றம் இன்றி தனது வீரர்களை களமிறக்கி இருக்கிறது. கடந்த 3 ஆட்டங்கள் நடைபெற்ற மைதானம் இல்லாமல், இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி புதிய மைதானத்தில் களமிறங்குகிறது. இந்த மைதானம் ஸ்பின்னர்களுக்கு வாய்ப்பாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய அணியில் ஸ்பின்னர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் எடுத்து அசத்திய வருண் சக்கரவர்த்திக்கு (Varun Chakravarthy) மீண்டும் இன்றைய போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் சார்பில் விளையாடும் வீரர்கள்: