ஜூன் 30, புதுடெல்லி (Sports News): ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) இறுதிப்போட்டியில், ரோகித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி, 11 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசி டி20 உலகக்கோப்பையை (India Vs South Africa IND Vs SA) கைப்பற்றி இந்திய மண்ணுக்கு வெற்றிக்கோப்பையுடன் திரும்பவுள்ளது. நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தென்னாபிரிக்க அணி 169 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியை அடைந்தது. முதல் வெற்றியை எதிர்பார்த்த தென்னாபிரிக்க அணிக்கு இது ஏமாற்றம் எனினும், அவர்கள் சிறப்பாக விளையாடி நடப்பு தொடரின் ரன்னராக இருக்கின்றனர். MS Dhoni Wish on Team India: "எனது பிறந்தநாளில் விலைமதிக்க முடியாத பரிசு" - இந்திய அணியின் வெற்றியை பாராட்டிய எம்.எஸ் தோனி.!
பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணிக்கு பாராட்டு:
வெற்றியை அடைந்துள்ள இந்திய அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பாராட்டுகளை குவித்து வருகின்றனர். எம்.எஸ் தோனி உட்பட பல முன்னாள் கிரிக்கெட்டர்களும், ஆட்சியாளர்களும் வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "வெற்றியாளர்கள்! எங்களின் டி20 கிரிக்கெட் அணி, உலகக்கோப்பையை அதற்கே உரித்தான பாணியில் தாயகத்திற்கு கொண்டு வருகிறது. இந்திய அணிக்காக நாங்கள் பெருமையடைகிறோம். இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது" என கூறியுள்ளார். Rohit Sharma & Virat Kohli Retirement: அடுத்தடுத்து ஓய்வை அறிவித்த விராட் கோலி & ரோஹித் சர்மா.. வெற்றியுடன் மகிழ்ச்சியாக விடைபெறும் வீரர்கள்.!
பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு வீடியோ:
CHAMPIONS!
Our team brings the T20 World Cup home in STYLE!
We are proud of the Indian Cricket Team.
This match was HISTORIC. 🇮🇳 🏏 🏆 pic.twitter.com/HhaKGwwEDt
— Narendra Modi (@narendramodi) June 29, 2024