டிசம்பர் 14, பிரிஸ்பேன் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில், 3வது டெஸ்ட் (AUS Vs IND 3rd Test, Day 1) போட்டி இன்று (டிசம்பர் 14) இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு பிரிஸ்பேனில் உள்ள கப்பா (Gabba) மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி இரண்டு மாற்றங்களை செய்தது. அதன்படி, அஸ்வின், ஹர்ஷித் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜடேஜா, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். NZ Vs ENG 3rd Test: கடைசி டெஸ்ட் போட்டி முதல் நாள்; நியூசிலாந்து அணி 315 ரன்கள் குவிப்பு.. லதாம், சான்ட்னர் அரைசதம் விளாசல்..!
இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான உஸ்மான் கவாஜா - நாதன் மெக்ஸ்வீனி ஆகியோர் அவுட்டாகாமல், 13.2 ஓவர்களில் 28 ரன்கள் அடித்தனர். அப்போது, ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால் (Heavy Rain) ஆட்டம் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. ஏற்கனவே, பிரிஸ்பேனில் (Brisbane) 5 நாட்கள் மழை பெய்யக்கூடும் என அங்குள்ள வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்த நிலையில், போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் மழைபெய்ய தொடங்கியது. இதனால் மழையின் காரணமாக தற்போது முதல் ஆட்டம் முடிவுக்கு வந்தது.