Meg Lanning & Smriti Mandhana | DC Vs RCB WPL 2025 (Photo Credit: wplt20.com)

பிப்ரவரி 17, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரிமியர் லீக் 2025 (TATA Women's Premier League) போட்டியில், நான்காவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா பிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (Delhi Capitals Vs Royal Challengers Bengaluru Women's WPL 2025) மோதுகிறது. பெங்களூர் அணி ஏற்கனவே தான் எதிர்கொண்ட ஒரு போட்டியில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. டெல்லி அணியும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதனால் இரண்டு அணிகளும் வெற்றி பெற முனைப்புடன் செயல்படும் என்பதால், இன்றைய ஆட்டம் விறுவிறுப்பு தன்மையை பெறுமான எதிர்பார்க்கப்படுகிறது. IPL Schedule Full List in Tamil: டாடா ஐபிஎல் 2025 போட்டிகள்.. எந்த ஆட்டம் எப்போது? எங்கு? முழு விபரம் தமிழில் இதோ.! 

டெல்லி கேபிட்டல்ஸ் பெண்கள் அணி - ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் அணி வீரர்கள் (DC Vs RCB Women's WPL 2025):

மேக் லின்னிங் (Meg Lanning) தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் பெண்கள் (Delhi Capitals Women's WPL T20 Squad) கிரிக்கெட் அணியில், ஜெமியா ரோட்ரிக்ஸ், நிகி பிரசாத், சபில் வர்மா, சினேகா தீப்தி, அலிஸ் காப்செ, அன்னபெல் சுதர்லேண்ட், அருந்ததி ரெட்டி, ஜெஸ் ஜானஸன், மரீசானே காப், மின்னு மணி, ஷிகா பாண்டே, நந்தினி காஷ்யப், சாரா ப்ரயஸ், தனியா பாட்டியா, ராதா யாதவ், திலஸ் சாது, என் சாரணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பெங்களூர் கிரிக்கெட் அணியில் (Royal Challengers Bangalore Women's WPL Squad) தானி ஹோட்ஜ், சபினேனி மேக்னா, ஸ்மித்ரி மந்தனா, சார்லி டீன், எலிஸ் பேரி, ஜியார்ஜ் கிரகம், கனிகா அனுஜா, ராகவி பிஸ்ட், நுசத் பிரவீன், ரிச்சா கோஷ், ஜக்ரவி பவார், ஜோசிதா, ரேனுகா சிங், சினேக ராணா, ஆஷா சோபனா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அணியை (Royal Challengers Bangalore Women's Team Captain) கேப்டனாக ஸ்மித்ரி மந்தனா (Smriti Mandhana) கேப்டனாக வழிநடத்துகிறார்.

டாஸ் அப்டேட் (Toss Update): இரவு 07:00 மணி

போட்டி தொடங்கும் நேரம்: இரவு 07:30 மணி

போட்டி நடைபெறும் இடம்: பிசிஏ கிரிக்கெட் மைதானம், வதோதரா

நேரலை ஓடிடி: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio HotStar)

நேரலை டிவி: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)

பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் புள்ளிப்பட்டியல்:

இன்றைய ஆட்டத்திற்கு தயாரான பெங்களூர் அணி: