Paris Olympics 2024 (Photo Credit: @Olympics2024 X / @Paris X)

ஆகஸ்ட் 12, பாரிஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸில், 2024 பாரிஸ் ஒலிம்பிக்ஸ் (Paris Olympics) போட்டிகள் 19 நாட்களுக்கு பின், கடந்த 26 ஜூலை அன்று தொடங்கி, ஆகஸ்ட் 11ம் தேதியான நேற்றுடன் கொண்டாட்டங்களுடன் நிறைவுபெற்றது. உலகளவில் 206 நாடுகளில் இருந்து 10,714 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் 32 விளையாட்டுகளில் 329 பிரிவுகளாக நடைபெற்ற ஆட்டங்களில் கலந்துகொண்டனர்.

பதக்கப்பட்டியல் முன்னணி விபரம்:

நாடுகள் வாரியாக அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது. சீனா 40 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என 91 பதக்கத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஜப்பான் 20 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 45 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நெதர்லாந்து, பிரிட்டன், கொரியா, இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்து என முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறது. இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கத்துடன் 71 வது இடத்தில் இருக்கிறது. Hindenburg Research: சர்ச்சையை கிளப்பிய ஹிண்டன்பர்க் அறிக்கை; அதானியுடன் சேர்ந்து இவர்களும் கூட்டா?.. பகீர் தகவல்.! 

71 வது இடத்தில் இந்தியா:

கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள், நேற்றுடன் நிறைவுபெற்றது. வெற்றிபெற்ற வீரர்கள் சார்பில் தங்களின் நாட்டு கொடியுடன் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இந்தியா சார்பில் மனு பார்க்கர், ஸ்ரீஜேஷ் ஆகியோர் தேசியக்கொடியை ஏந்தி பயணித்தனர். விரைவில் பதக்கத்துடன் வீரர்-வீராங்கனைகள் அவர்கள் தாயகம் நோக்கி பயணிக்கவுள்ளனர். அவர்களுக்கு முழு அளவிலான மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்படவுள்ளது. இந்தியா சார்பில் களம்கண்ட 120 பேரில் துப்பாக்கிசூடுதல், ஈட்டி எறிதல், ஹாக்கி, மல்யுத்தம் ஆகிய பிரிவுகளில் வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 2028ம் ஆண்டில் ஜூலை 14 முதல் ஜூலை 30ம் தேதி வரையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angels Olympics 2028) நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன.