RCB Arrived in Bengaluru (Photo Credit: @ANI X)

ஜூன் 04, பெங்களூரு (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) நேற்று (ஜூன் 03) நடைபெற்ற இறுதிப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதனை ஆர்சிபி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாட (RCB Victory Celebrations) பெங்களூருவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக முதல்வரை சந்திக்கவுள்ளனர். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு திறந்தவெளி பேருந்தில் வெற்றி அணிவகுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் எனவும் அறிவிக்கப்பட்டது. RCB Victory Parade: ஆர்சிபி வெற்றி பேரணிக்கு முட்டுக்கட்டை போட்ட காவல்துறை.. ரசிகர்கள் ஷாக்..!

ரசிகர்கள் உற்சாக வரவேற்பு:

இதனிடையே, பெங்களூருவில் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாது என காவல்துறையினர் பேருந்து அணிவகுப்பை ரத்து செய்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அகமதாபாத்தில் இருந்து ஆர்சிபி அணி வீரர்கள் பெங்களூரு வந்தடைந்தனர். சுமார் 1 மணியில் இருந்தே ஆர்சிபி ரசிகர்கள் விமான நிலையத்தில் ஒன்றாக கூடினர். பெங்களூரு வந்தடைந்த ஆர்சிபி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பெங்களூரு வந்தடைந்த ஆர்சிபி வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு: