ஆகஸ்ட் 12, புதுடெல்லி (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கேப்டன் விராட் கோஹ்லி (Virat Kohli), இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு இடுகை பதிவு செய்து ரூ.11.45 கோடி பணம் பெறுவதாக Hopper HQ அமைப்பு செய்திகளை வெளியிட்டது. மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக வருமானம் பெறும் மூன்றாவது செல்வந்தர் விராட் கோஹ்லி என தெரிவித்தது.
இவை செய்தியாக வெளியாகி இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியர்கள் உட்பட சர்வதேச அளவில் 25 விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியாகி இருந்தது. இந்த 25 பேரில் மூன்றாவது இடத்தில் விளையாட்டு வீரர் விராட் கோஹ்லி இடம்பெற்றதாக தரவுகளின் வாயிலாக தெரிவிக்கப்பட்டன. Beriev Be-200 Altair: நீரில் இருந்து மேலெழும்பும் விமானத்தை உருவாக்கி வெற்றிகரமாக சோதித்த ரஷியா; போக்குவரத்து, பாதுகாப்பு, தேடல் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என அறிவிப்பு.!
இந்த விசயத்த்திற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ள விராட் கோஹ்லி, தனது ட்விட்டர் பக்கத்தில், "வாழ்க்கையில் நான் பெற்ற அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருக்கும் அதே வேளையில், எனது சமூக ஊடக வருமானம் குறித்து சுற்றி வரும் செய்திகள் உண்மையல்ல" என தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை, ஆசிய கோப்பை 2023 உட்பட பல போட்டிகளில் அடுத்தடுத்து கலந்துகொள்ளவுள்ள விராட் கோஹ்லி, அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இத்தகைய நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் செல்வாக்காக இருக்கிறார் என செய்தியை வெளியிட்டு, அவரின் ஒரு இடுகைக்கான வருமானம் குறித்து அவதூறா பரப்பப்பட்டு வருவதாக அவரின் ரசிகர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
While I am grateful and indebted to all that I’ve received in life, the news that has been making rounds about my social media earnings is not true. 🙏
— Virat Kohli (@imVkohli) August 12, 2023