IND Vs AUS 2023 Final | Rohit Sharma (Photo Credit: Twitter)

ஜூன் 11, ஓவல் (Cricket News): உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட்டில் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியும் - ஆஸ்திரேலிய அணியும் (India Vs Aus WTC Final 2023), இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓவல் (The Oval Cricket Stadium) கிரிக்கெட் மைதானத்தில் இறுதி பலபரீட்சை நடத்தி கொண்டது.

இந்த ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. தொடக்கத்தில் இருந்து சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய அணி, ரன்களை மளமளவென குவித்து இந்திய அணிக்கு பெரும் இலக்கினை நிர்ணயம் செய்தது.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்கள் எடுக்க, இந்திய அணி 296 ரன்கள் மட்டுமே குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் 270 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி குவித்தாலும், இந்திய அணி தனது இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அது பொய்த்துப்போய் 234 ரன்கள் மட்டுமே குவிந்ததால், இந்திய அணி மாபெரும் தோல்வியை தழுவியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி சேசிங் செய்யும் எண்ணத்தில் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துகொண்டது.

இந்த வாய்ப்பை தனதாக்கிய ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் வெளுத்து வாங்கியதால், வெற்றி வாய்ப்பு அவர்களுக்கானதாகியுள்ளது. வெளிநாட்டு வீரர்களை பொறுத்தமட்டில் இந்திய அளவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் பெருவாரியாக பங்கேற்கிறார்கள்.

Indian Cricketer Rohit Sharma (Photo Credit: Twitter)

இவர்களுக்கு இந்திய மண்ணின் நில அமைப்பு தெரியும். அதேபோல, நடப்பு போட்டியை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள், கடுமையான சவால் கொண்ட இடங்களிலும் விளையாடும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

ஆனால், இந்திய அணியின் வீரர்கள் வெளிநாடுகளில் சென்று விளையாடும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது. அங்கு இந்தியாவை போல ஐ.பி.எல் தொடர் நடைபெறவில்ல்லை என்றாலும், நட்பு ரீதியான ஆட்டங்களில் மட்டுமே அவை சாத்தியப்படுகிறது.

இந்திய அணியின் தோல்வியால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் இருக்கும் நிலையில், இந்திய அணியை வழிநடத்திய ரோஹித் சர்மா தனது முயற்சி தோல்வியற்றதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "கடந்த 8 ஆண்டுகளாக இதற்கான முயற்சியை இந்திய அணி எடுத்து வருகிறது என்றும், இந்த ஆண்டில் வெற்றி அடைய இயலாமல் சென்றதற்கு இந்திய ரசிகர்கள் தங்களை மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், டி20 & டெஸ்ட் விளையாட்டுகளில் இருந்து தான் ஓய்வு பெரும் நேரம் இது. இதுவே அதற்கு தருணம். அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கனத்த இதயத்துடன் கூறினார்.