Alica Schmidt (Photo Credit: @Mens_Corner__ X / Wikipedia)

ஆகஸ்ட் 10, பாரிஸ் (Sports News): பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில், 2024 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. உலகளவில் 205 நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர்-வீராங்கனைகள் கலந்துகொண்ட ஒலிம்பிக் போட்டியில் 320 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் நடந்த விளையாட்டுகளில் பலரும் பங்கேற்றனர். இந்தியா சார்பில் 117 வீரர்கள் 32 பிரிவுகளில் நடைபெற்ற விளையாட்டுகளில் கலந்துகொண்டனர். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நாளையுடன் தனது நிறைவுக்கட்டத்தை எட்டுகிறது. அமெரிக்கா 33 தங்கம், 39 வெள்ளி, 39 வெண்கலம் என 111 பதக்கத்துடன் முதல் இடத்திலும், சீனா 33 தங்கம், 27 வெள்ளி, 23 வெண்கலம் என 83 பதக்கத்துடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 18 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம் என 48 பதக்கத்துடன் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. இந்தியா 10 மீட்டர், 50 மீட்டர் ஏர் ரைபிள், ஹாக்கி, ஈட்டி எறிதல் என 5 வெண்கலம், 1 வெள்ளி என 6 பதக்கத்துடன் 69 வது இடத்தில் இருக்கிறது. Paris Olympics 2024: ஈட்டி எறிதலில் மீண்டும் வெற்றி; ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ரா.!

தோல்வியை தழுவிய அழகான வீராங்கனை:

ஜெர்மனியை சேர்ந்த தடகள வீராங்கனை அலிகா ஷ்மிட் (Alica Schmidt), உலகிலேயே அழகான ஒலிம்பிக் (World's Sexiest Athlete) போட்டி வீராங்கனையாக கருதப்பட்டார். இவர் 400 மீட்டர் அளவிலான தடகளப்போட்டியில் முந்தைய காலங்களில் பதக்கம் வென்றவரும் ஆவார். இதனால் நடப்பு ஆண்டிலும் அவர் வெற்றியை தட்டிச்செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தகுதிச்சுற்றில் ஜெர்மனி அணியினர் 3: 26.95 நேரத்தில் 4 X 400 பிரிவில் தகுதிச்சுற்றை நிறைவு செய்தனர். ஜமைக்கா அணியினர் 3: 24.92 நேரத்தில் சுற்றை நிறைவு செய்ய, ஆஸ்திரேலிய அணியினர் 3: 21.44 நேரத்தில் தகுதிச்சுற்றை நிறைவு செய்தனர். இதனால் ஜேர்மனிய அணியினர் தோல்வியடைந்து வெளியேறினர். இதனால் பெரிதும் கவனிக்கப்பட்ட அலிகா தோல்வியுடன் வெளியேறினார்.

 

View this post on Instagram

 

A post shared by Alica Ѕchmidt | Track & Field (@alicasmd)