DC Vs RCB | WPL 2025 (Photo Credit: @WPLT20 X)

பிப்ரவரி 17, வதோதரா (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் (TATA Women's Premier League 2025) போட்டியில், நான்காவது ஆட்டம் 17 பிப்ரவரி 2025 இன்று, இரவு 07:30 மணிக்கு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிட்டல்ஸ் (RCB Vs DC WPL 2025) அணிகள் இடையே நடைபெறுகிறது. போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி (Jio HotStar) செயலி மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். தமிழ் மொழியிலும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 (Star Sports 1) தொலைக்காட்சியில், நேரலையை தமிழில் காணலாம். இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பவுலிங் தேர்வு செய்தது. இதனால் டெல்லி அணி களமிறங்கியது. Renuka Singh Takes Shafali Verma Wicket: முதல் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிய ஷபலி வர்மா; பந்துவீச்சில் அசத்திய ரேணுகா சிங்.! 

விக்கெட்டை இழந்து தடுமாறி திணறிய டெல்லி:

டெல்லி அணியின் சார்பில் களமிறங்கிய கேப்டன் மேக் 19 பந்துகளில் 17 ரன்னும், ஜெமியா 22 பந்துகளில் 34 ரன்னும், அனபெல் சுதர்லேண்ட் சார்பில் 13 பந்துகளில் 19 ரன்னும், மரிஜானா 13 பந்துகளில் 12 ரன்னும், சாரா பிரையஸ் 19 பந்துகளில் 23 ரன்னும், ஷிகா பாண்டே 15 பந்துகளில் 14 ரன்னும் அதிகபட்சமாக ரன்கள் சேகரித்து இருந்தனர். 19.3 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்த டெல்லி அணி 141 ரன்கள் குவித்தது. இதனால் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்குகிறது. பெங்களூர் அணியின் சார்பில் பந்துவீசியவர்களில் ரேணுகா சிங் (Renuka Singh) 4 ஓவரில் 3 விக்கெட் எடுத்து அசத்தினார். ஜியார்ஜியா 4 ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் டெல்லி அணி திணறிப்போனது.

19.3 ஓவர் முடிவில் 141 ரன்கள் டெல்லி அணி குவிப்பு:

ரேணுகா சிங் (Renuka Singh Thakur) விக்கெட் எடுத்த காணொளி: