Tiruvannamalai Child Rape (Photo Credit : @annamalai_k X)

ஜூலை 17, திருவள்ளூர் (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, ஆரப்பாக்கம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இதனிடையே சம்பவத்தன்று சிறுமி பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது மர்ம நபர் ஒருவரால் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். சிறுமி தனது வீடு நோக்கி சாலையில் தனியாக சென்றபோது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஆட்கள் இல்லாத இடத்தை குறிவைத்து சிறுமியின் வாயைப்பொத்தி அருகில் இருந்த தோப்பு பகுதியில் தூக்கிச் சென்று வன்கொடுமை செய்துள்ளார்.

ஆதாரத்துடன் தகவலை பகிர்ந்த அண்ணாமலை :

இந்த விஷயத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் கூறிய நிலையில், கடந்த 5 நாட்களுக்கு மேலாக காவல்நிலையத்தில் சென்று புகாரளிக்க முயன்ற போதும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே இந்த விஷயம் குறித்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் சிசிடிவி கேமரா ஆதாரத்துடன் இந்த தகவலை பகிர்ந்து வேதனை  தெரிவித்தார். திருவண்ணாமலையில் ஆட்டுத்தலையுடன் உலாவும் மர்ம உயிரினம்?.. உண்மை இதுதான்.! 

போலீசார் விசாரணை :

இந்நிலையில் தற்போது இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமையை வன்கொடுமை செய்தது உள்ளூர் இளைஞரா? அல்லது வெளிமாநில இளைஞரா? என்ற கோணத்தில் அங்கிருக்கும் கேமராக்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக 7 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணையும் நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோவை பகிர்ந்து வேதனை :

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3