ஜூலை 29, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல், பாப்பாக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல். சம்பவத்தன்று இவரை அதே ஊரில் வசித்து வரும் மாற்று சமூகத்தை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறார்கள் கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உயிருக்கு அஞ்சியவர், அங்கிருந்த வீடு ஒன்றில் புகுந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
காவல் அதிகாரி மீது தாக்குதல் :
மேலும் 17 வயதுடைய 2 சிறார்களிடம் ஆயுதங்களை கைவிட்டு களைந்து செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனை கேட்காத சிறார்கள் காவல் அதிகாரியின் மீது தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர். இதனால் காவலர் அங்கிருந்த வீடு ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளார். அப்போது வெளியில் இருந்து அறிவாளால் வீட்டின் கதவை வெட்டிய சிறார்களிடம், "வீட்டில் பெண்கள் இருக்கிறார்கள். எனக்கும் குடும்பம் உள்ளது. ஆயுதத்தை கைவிட்டு உடனடியாக கலைந்து சென்று விடுங்கள். இது சரியான நடவடிக்கை இல்லை" என காவலர் கூறியிருக்கிறார்.
17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு :
அதிகாரியின் எந்த ஒரு அறிவுரையையும் ஏற்றுக்கொள்ளாத 2 சிறார்களும் கொலை முயற்சி தாக்குதலில் உறுதியாக இருக்கவே, காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் 17 வயது சிறுவனின் மீது குண்டு பாய்ந்துள்ளது. இதனை அடுத்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கூடுதல் காவல்துறையினர் பாப்பாக்குடி கிராமத்தில் குவிக்கப்பட்டனர். 6 Year Old Girl Dies: வெறிநாய் கடித்ததில் காய்ச்சல் வந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு.. தடுப்பூசி போட்டும் சோகம்.!
விசாரணையில் பகீர் :
இந்த சம்பவத்துக்கு பின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சிறுவனை மீட்டு போலீசார் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக காவல்துறையினர் 17 வயதுடைய சிறாரின் மீது 11 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இருதரப்பு இடையே நடந்த மோதல் சம்பவத்தில் இளைஞரை கொல்ல முயன்றதும், அவரை காப்பாற்ற வந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.
இளைஞர் கொலை முயற்சி :
உள்ளூரில் ரவுடிகள் போல வலம் வந்த சிறார்கள் போலீசாரிடம் ரவுடிசம் செய்பவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போரை மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது. சக்திவேல் என்ற இளைஞரும் இது தொடர்பான சம்பவத்தில் சிறார்களால் கொலை செய்ய முற்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி இருக்கிறார். இந்த விஷயம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை ஐடி ஊழியர் படுகொலை :
நெல்லையில் நேற்று முன்தினம் காதல் விவகாரத்தில் 26 வயதுடைய ஐடி ஊழியர் கவின் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய 22 வயதுடைய பெண் சித்த மருத்துவரின் சகோதரர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர் போலீஸ் தம்பதியின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது. காதல் விவகாரத்தில் இளைஞர் கொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பான பதற்றம் தற்போது வரை தமிழகத்தில் இருந்து வருகிறது. இதனிடையே நெல்லையில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.