Covai Student Murder Case (Photo Credit: YouTube)

ஜூன் 02, பொள்ளாச்சி (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி (Pollachi) வடுகம்பாளையம் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர், வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். Anna University Rape Case: குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை.. சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவு.!

கல்லூரி மாணவி கொலை:

இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில், மாணவியின் பெற்றோர் காலையில் வேலைக்கு சென்றுள்ளனர். இதன் பிறகே, மர்ம நபர் மாணவியை கத்தியால் குத்திக் கொலை (Murder) செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது