Anna University Rape Case (Photo Credit : @Idam_valam X)

ஜூன் 02, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலருடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது, பல்கலைக்கழக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஞானசேகரன் என்ற நபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த வழக்கின் விசாரணையில், ஞானசேகரன் அரசியல் கட்சி பிரமுகர் என்பது தெரியவந்தது.

வழக்கு தொடர்பான விசாரணை :

இதனை தொடர்ந்து ஞானசேகரனுடன் மற்றொருவரும் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதனால் யார் அந்த சார்? என பிற அரசியல் கட்சிகளால் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வழக்கு தற்போது நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில், ஞானசேகரன் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்தது மட்டுமல்லாது, திருட்டு போன்ற சம்பவங்களிலும் ஈடுபட்டு பல முறைகேடான சொத்துக்களை சேர்த்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மகிலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. Gold Silver Price: மெல்ல உயரத்தொடங்கும் தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரம் என்ன?.. விபரம் இதோ.! 

நீதிமன்றத்தின் தீர்ப்பு :

நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பால் துரித விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த மே 28ஆம் தேதியன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஞானசேகருக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தும் சட்டபூர்வமாக இருந்ததால் ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். 11 சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் ஜூன் 2ஆம் தேதியான இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.

ஞானசேகரன் வழக்கில் தண்டனை விபரம் :

இதன் பேரில் இன்று ஜூன் 02 ஆம் தேதி காலை சென்னை நீதிமன்றத்திற்கு ஞானசேகரன் அழைத்துவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் ஞானசேகரன் பெயரில் 11 குற்றசாட்டுகள் உறுதிசெய்யப்பட்டதால், ரூ.90,000 அபராதம் விதித்து ஆயுள் தண்டனை விதித்தது. மேலும் 30 ஆண்டுகள் எந்தவித தண்டனை குறைப்பும் இல்லாமல் நிபந்தனையுடன் ஆயுள் தண்டனை வழங்கி சென்னை மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.