ஜனவரி 03, பட்டுக்கோட்டை (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை (Pattukkottai), முத்துப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுப் பேருந்து தனியார் பேருந்தை முந்த முற்பட்டது. இதன்போது, முத்துப்பேட்டைக்கு அருகில் தனியார் பேருந்து வந்தபோது, அரசுப் பேருந்து தனியார் பேருந்தின் வலப்பக்கம் மண்ணில் இறங்கி முந்திச் செல்ல முற்பட்டது. தனியார் பேருந்து சென்றதும் சாலையை கடக்கலாம் என இளைஞர் ஒருவர் நின்று, சாலையை கடந்த நிலையில், அரசுப் பேருந்து திடீரென குறுக்கே பாய்ந்தது. ED Raid: திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு..! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு.!
நொடியில் எமனை பார்த்து தப்பிய இளைஞர்:
இதனால் பதறிப்போன இளைஞர் இரண்டு பேருந்துகளுக்கு நடுவே எலிபோல சிக்கிக்கொண்டு லேசான காயத்துக்கு உள்ளாகினர். நல்வாய்ப்பாக இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் சுதாரித்து செயல்பட்டதால், இளைஞர் உயிர்தப்பினார். விசாரணையில், அவரின் பெயர் பரத் என்பது தெரியவந்தது. தனியார் பேருந்தை அரசுப் பேருந்து ஆபத்தான வகையில் முந்திச்செல்ல முற்பட்டு பயணிகளுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, இளைஞர் ஒருவரின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டது நடந்துள்ளது. இதன் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.
இரண்டு பேருந்துகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட இளைஞர்:
Just Miss🙄😳#Thanjavur #BusAccident #Accident #CCTVpic.twitter.com/oHgnntRAHm
— கரிகாலன் (@k_karikalan) January 3, 2025
பேருந்துக்கு நடுவே சிக்கிய இளைஞரின் பதறவைக்கும் காட்சிகள்:
தனியார் பஸ்ஸை முந்த முயன்ற அரசு பஸ்..இளைஞருக்கு இரக்கம் காட்டிய எமன் - மிரளவிடும் காட்சிகள்#thanjavur #Accident #ThanthiTV pic.twitter.com/43HL9k0yxm
— Thanthi TV (@ThanthiTV) January 3, 2025