(ஆகஸ்ட் 17, மதுராந்தகம்) (Chengalpattu news) : சென்னையில் பணிபுரியும் 3 மென் பொறியாளர்கள் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் (Chennai- Trichy National Highway, Nh45) நேற்று அதிகாலையில் கார் விபத்தில் உயிரிழந்தனர். கதிரவன் (30), நந்தகுமார் (55) மற்றும் கார்த்திக் (37) ஆகிய மூவரையும் போலீசார் இறந்த நிலையில் அடையாளம் கண்டனர். திண்டுக்கல் (Dindugal) மாவட்டத்தைச் சேர்ந்த கதிரவன் கார் ஓட்டும்போது கட்டுப்பாட்டை இழந்ததால், கார் பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. நந்தகுமார் திருவாரூர் (Tiruvarur) மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், கார்த்திக் திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்திருக்கிறது.
சென்னையில் ஐ.டி (IT) நிறுவனத்தில் பணிபுரியும் இந்த மூன்று பேரும் ராமநாதபுரத்திலிருந்து (Ramanathapuram) திரும்பி சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திலுள்ள அய்யனார் கோவிலருகே காலை 06:30 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். CP Radhakrishnan Rajinikanth Meets: ஜார்கண்ட் மாநில ஆளுநருடன் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு; மனதார நண்பரை வரவேற்ற ஆளுநர்.!
சத்தம் கேட்டு அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகளும் அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளும் சம்பவ இடத்திற்கு ஓடிவந்தனர். பின்பு தகவலறிந்து மதுராந்தகம் போலீசாரும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரும் அங்கே வந்தனர். சடலங்கள் வண்டியிலிருந்து மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
போலீசார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் மூவரும் விடுமுறை முடிந்து புதன்கிழமை பணிக்குச் செல்வதற்காக ஓய்வின்றி பயணித்ததாகவும், கதிரவன் கார் ஓட்டும்போது உறங்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 334 கி.மீ நீளமுள்ள, சென்னை- திருச்சி நெடுஞ்சாலை எண் 45 இல் , கடந்த நான்காண்டு காலமாக 2076 பேர் விபத்துக்குளாகி இறந்திருக்கின்றனர். மேலும், 7000 திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.