ஆகஸ்ட் 17, ராஞ்சி (Cinema News): தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம், இந்திய திரையுலகில் முக்கிய நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன், நடிகர் ரஜினிகாந்துடன் நேரில் சந்தித்தார். இருவரும் நேரில் சந்தித்து உரையாடிக்கொண்டனர். இதுகுறித்து சி.பி ராதாகிருஷ்ணன் ட்விட் பதிவு செய்துள்ளார். Badminton Court Under the Bridge: இரயில்வே மேம்பாலத்திற்கு அடியில் பேட்மிட்டன் பயிற்சி மையம்; அசாம் முதல்வரின் வேறலெவல் யோசனை..!
அந்த ட்விட் பதிவில், "ராஞ்சிக்கு வந்த எனது நெருங்கிய நண்பரை வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அளவில் தலைசிறந்த நடிகர், தலைசிறந்த மனிதர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேற்று ராஜ்பவனில் சந்தித்தேன். அவரை ஜார்கண்ட் மண்ணுக்கு நான் அன்போடு வரவேற்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
கோவையை பூர்வீகமாக கொண்ட சி.பி ராதாகிருஷ்ணன், பாஜகவின் முக்கிய தமிழக புள்ளிகளில் ஒருவராவார். இவர் 2 முறை கோவை தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3 முறை இரண்டாவது இடத்தினை பிடித்து தோல்வியையும் தழுவியுள்ளார். தற்போது ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்கள் பட்டியலில் இவரும் ஒருவர்.
On his arrival in Ranchi , delighted and very happy to meet my dear friend , one of India's greatest Actors and great Human Being Superstar Shri. @rajinikanth Ji at Raj Bhavan yesterday on a courtesy meet.
I heartily welcome him to the great land of Jharkhand. pic.twitter.com/oyM049CWMv
— CP Radhakrishnan (@CPRGuv) August 17, 2023