Five Youth Drown In River: கொள்ளிடம் ஆற்றில் 5 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி; 3 பேர் உடல்கள் மீட்பு..!
தஞ்சாவூரில் கொள்ளிடம் ஆற்றில் 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் 09, தஞ்சாவூர் (Thanjavur News): சென்னையில் உள்ள சேத்துப்பட்டு நேருபூங்கா ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பிராங்கிளின் (வயது 23), ஆண்டோ (வயது 20), அவரது நண்பர்கள் கிஷோர் என்ற தமிழரசன் (வயது 20), சூளையைச் சேர்ந்த கலைவேந்தன் (வயது 20) மற்றும் ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த மனோகர் (வயது 19) ஆகியோர் உணவுவிநியோக நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் உட்பட 18 பேர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். TN Weather Update: வங்கக்கடலில் உருவாகிறது அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 08) காலை தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்துக்குப் புறப்பட்டனர். பேராலயம் அருகே உள்ள கொள்ளிடம் (Kollidam River) ஆற்றங்கரையில், மகிமைபுரத்தில் சமையல் செய்துள்ளனர். அப்போது, பிராங்கிளின், ஆண்டோ, கிஷோர், கலைவேந்தன், மனோகர் ஆகியோர் ஆற்றில் குளிக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நீரில் (Drowning) மூழ்கினர்.
இதனையடுத்து, அவர்களுடன் வந்தவர்கள் தேடியபோது கலைவேந்தன், கிஷோர் ஆகியோர் ஆற்றுக்குள் இருந்த மண்திட்டில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் ஆற்றில் இறங்கி, பிராங்கிளின், ஆண்டோ, மனோகர் ஆகியோரைத் தேடினர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு நேற்று மாலை மனோகர் உடல் மீட்கப்பட்டது. சகோதரர்கள் பிராங்கிளின், ஆண்டோ ஆகியோரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Sep 09, 2024 03:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

