மே 13, பொள்ளாச்சி (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு, கல்லுாரி மாணவிகள் மற்றும் பெண்களை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை (Pollachi Rape Case) செய்து, அதனை ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அனைவரையும் பதைபதைக்கச் செய்தது. சி.பி.ஐ., விசாரணை நடத்திய இந்த வழக்கில், திருநாவுக்கரசு (வயது 34), சபரிராஜன் (வயது 32), சதீஷ் (வயது 32), வசந்தகுமார் (வயது 30), மணிவண்ணன் (வயது 32), பாபு (வயது 33), ஹெரன் பால் (வயது 32), அருளானந்தம் (வயது 38), மற்றும் அருண்குமார் (வயது 32), ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். College Student Dies: செல்போனில் மூழ்கியதால் முட்டிதூக்கிய ரயில்.. தண்டவாளத்தில் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்.!
9 பேரும் குற்றவாளிகள்:
கடந்த 6 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கப்பட்டு 'இன்கேமரா' முறையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு தரப்பு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதம் முடிந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி இன்று (மே 13) தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி நந்தினிதேவி அதிரடி தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரங்கள் நண்பகலில் அறிவிக்கப்படவுள்ளது.