Pattukkottai Woman Murder (Photo Credit: @Aravindhan_ADMK X)

மே 06, பட்டுக்கோட்டை (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை (Pattukkottai) உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது 35). இவருக்கு, மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருடன் திருமணமாகி சாமுவேல் (வயது 15), சரவணன் (வயது 13) என்ற இரு மகன்கள் உள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு கணவர் சண்முகசுந்தரம் இறந்துவிட்டார். இதனையடுத்து, அவரது மனைவி சரண்யா பட்டுக்கோட்டை தாலுகா, கழுகபுலி காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன் (வயது 45) என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் உதய சூரியபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர். Chennai News: மதுபோதையில் வளைகாப்பு வீட்டில் நடந்த சோகம்.. பறிபோன உயிர்.!

பெண் கொடூர கொலை:

இந்நிலையில், நேற்று (மே 05) இரவு சரண்யாவின் மகன்கள் ஆகியோர் கடையை பூட்டி விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். சரண்யா, கடையை பூட்டி விட்டு கடையிலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, சரண்யா வீட்டிற்கு செல்லும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாக கொலை (Murder) செய்யப்பட்டுள்ளார். அவரது தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.