ஏப்ரல் 22, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியை சேர்ந்த 8 பேர் பீகார் மாநிலத்தில் உள்ள டியோரியாவில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நேற்று அதிகாலை மகிழுந்தில் பயணம் செய்துள்ளனர். Young Man Suicide: காதலியை கரம் பிடிக்க முடியவில்லையே..! விரக்தியில் வாலிபர் தற்கொலை..!

இந்நிலையில், அதிகாலை டெல்லி - ஆக்ரா இடையேயான யமுனா தேசிய நெடுஞ்சாலையில் (National Highway) எட்மட்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மகிழுந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மகிழுந்தில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இதுதொடர்பாக விசாரித்ததில், ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததுதான் விபத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.