Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 17, சென்னை (Chennai News): தமிழகத்தில் சமீப காலமாகவே போதைப்பொருட்களின் புழக்கமும், அதனால் ஏற்படும் குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கொலை, குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. Tiruchendur News: முருகா இரக்கமில்லையா? திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் பக்தர் மூச்சுத்திணறி மரணம்.. கண்ணீரில் குடும்பத்தினர்.!

இரட்டைக்கொலை:

இந்நிலையில், நேற்றிரவு (மார்ச் 16) சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிப் படுகொலை (Murder) செய்தனர். படுகொலை செய்யப்பட்ட சுரேஷ், காஞ்சிபுரம் காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என கூறப்படுகிறது. முன்பகை காரணமாக இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்ததா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.