College Student Murder Case (Photo Credit : Youtube

ஜூலை 30, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள கே.கே நகர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இவர் திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். இவரது பேரன் சந்துரு. சென்னை அயனாவரம் முத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் நிதின் சாய் (வயது 20). மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். அயனாவரத்தில் உள்ள பி.இ கோவில் தெருவில் வசித்து வருபவர் அபிஷேக் (வயது 20). இவரும் அதே கல்லூரியில் பயின்று வருகிறார். நிதின் சாய், அபிஷேக் நண்பர்கள் ஆவார்கள்.

கார் மோதியதில் உயிரிழப்பு :

இவர்கள் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு தனது பள்ளிப்பருவ தோழனான மோகன் என்பவரின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். பின் பிரியாணி சாப்பிட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது திருமங்கலம் சாலையில் இவர்களுக்கு பின்னால் வந்த கார் மோதியதில் நிதின் சாய் தலை, மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். அபிஷேக் படுகாயமடைந்த நிலையில், இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். Breaking: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தலையில் வெட்டிப்படுகொலை.. தாராபுரத்தில் பயங்கரம்.! 

நேரில் சரணடைந்த திமுக கவுன்சிலரின் பேரன் :

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், நிதின் சாயின் தந்தை சுரேஷ் தனது மகன் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி புகாரளித்தார். மேலும் அவருடன் இருந்த மாணவர்களும் இதையே காவல்துறையினரிடம் வாக்குமூலமாக பதிவு செய்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில் திமுக கவுன்சிலர் பேரன் சந்துரு இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சந்துருவின் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்த நிலையில், அவர் காவல் நிலையத்தில் நேரில் சென்று சரணடைந்தார்.

விசாரணியில் பகீர் :

இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், கே.கே நகர் பகுதியில் வசித்து வரும் 12ஆம் வகுப்பு மாணவியை நிதின் சாய் வகுப்பில் பயின்று வரும் வெங்கடேசன் என்பவர் ஒருதலையாக காதலித்துள்ளார். இந்த மாணவியை இசையமைப்பாளர் ஒருவர் நடத்திவரும் கல்லூரியில் படித்து வரும் பிரணவ் என்ற மாணவரும் காதலித்துள்ளார். வெங்கடேசனின் ஒரு தலைக்காதல் குறித்து மாணவி பிரணவிடம் தெரிவித்துள்ளார். இதனால் பிரணவ் தனது கல்லூரி சீனியரான சந்துருவிடம் விவரத்தை கூறியுள்ளார்.

காதல் விவகாரத்தில் இளைஞர் பலி :

இதனை அடுத்து இரு தரப்பும் நேரில் சந்தித்து வெங்கடேசனை காதலை கைவிடுமாறு மிரட்டி இருக்கிறது. வெங்கடேசன் அதனை கேட்காத நிலையில் அவர்களை எச்சரிக்கும் பாணியில் செயல்பட திட்டமிட்டுள்ளனர். அதன்படி சொகுசு காரை வைத்து இரு சக்கர வாகனத்தில் சென்ற நிதின் சாய், அபிஷேக், வெங்கடேசன் மீது இடித்ததில் நிதின் சாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காதல் விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்ததால் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரத்தில் தொடர்பில்லாத இளைஞர் இவர்களின் கட்டப்பஞ்சாயத்தில் பலியாகி இருக்கிறார்.

திமுக கவுன்சிலரின் பேரன் வாக்குமூலம் :

இதனிடையே காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்த திமுக பிரமுகரின் பேரன் சந்துரு, "நாங்கள் கொலை செய்யும் நோக்கத்துடன் அவர்களை விரட்டவில்லை. எனது நண்பர் வாகனத்தை ஓட்டினார். நான் அவருடன் வாகனத்திற்குள் இருந்தேன் அவ்வளவுதான். எனக்கும் இந்த கொலைக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. எனது நண்பரும் அவரை கொலை செய்யும் எண்ணத்துடன் வாகனத்தை இயக்கவில்லை. அவர்களை எச்சரிக்கலாம் என்றே வாகனம் இயக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.