Lava Storm Lite 5G (Photo Credit :@LavaMobile X)

ஜூன் 20, புதுடெல்லி (Technology News): ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வழங்கும் வகையில் லாவா தனது 5G மொபைலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் பல கூடுதல் சிறப்பம்சங்களும் (Lava Storm Lite Features) இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விற்பனை சர்வதேச அளவில் ஜூன் 13ஆம் தேதியே தொடங்கிவிட்டாலும், இந்தியாவில் நேற்று ஜூன் 19 தொடங்கியது. Chennai News: லாரி சக்கரத்தில் சிக்கி தாயின் கண்முன் சிறுமி பலி.. பள்ளிக்கு செல்லும்போது சோகம்.! 

லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி சிறப்பம்சங்கள் (Lava Storm Lite Features) :

பளபளப்பான பின்புற அமைப்பு, அஸ்ட்ரால் ப்ளூ மற்றும் காஸ்மிக் டைட்டானியம் கலர் என 2 நிறங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட், லாவா ஸ்டார்ம் லைட் 5G, 120 இன்ச் HD+ டிஸ்ப்ளே அளவும் 6.75 இன்ச் கொடுக்கப்பட்டுள்ளதால் பயன்படுத்த அசத்தலாக இருக்கும். மேலும், புதுப்பிப்பு திறன் 120 HZ, 50MP சோனி IMX752 பின் கேமரா, 8MP செல்பி கேமரா, தூசி மற்றும் நீர் எதிர்ப்பு திறன் இணைக்கப்பட்டுள்ளது. பேட்டரி அளவு 5000 mAh ஆகும். சார்ஜர் 15W திறன், 4GB + 4GB ரேம் , 128GB ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 15 இல் இயங்கும். இதன் விலை ரூ.8000 ஆகும். பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தல் ஸ்மார்ட்போன் லாவா என்பதும் குறிப்பிடத்தக்கது.

லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி :