Jumping Suicide (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 02, காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (Chennai To Bengaluru National Highway) மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பெரும்பாலான மாணவ-மாணவிகள் அங்குள்ள கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், விடுமுறை நாளான நேற்றைய (செப்டம்பர் 01) தினம் இரவு விடுதியின் 5-வது மாடியில் இருந்து மாணவி (Medical College Student) ஒருவர் அழுது கொண்டே கீழே குதிப்பதற்காக நின்றுள்ளார். இதனை பார்த்த சிலர் உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால், அதற்குள் அந்த மாணவி 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். Sexual Harassment Of College Girls: கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பேராசிரியர் உட்பட 4 பேர் கைது..!

இதுகுறித்து தகவல் அறிந்த வந்த பொன்னேரிக்கரை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷர்லி (வயது 24). இவர், காஞ்சிபுரம் அருகே காரைப்பேட்டையில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லுாரியில், விடுதியில் தங்கி 5-ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் விடுதியில் உள்ள 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை (Suicide) செய்துகொண்டார்.

மேலும், இதுதொடர்பாக விடுதியில் தங்கியிருக்கும் சக மாணவியரிடமும், கல்லுாரி நிர்வாகத்தினரிடமும் தற்கொலைக்கான காரணம் குறித்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனியடையே உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.