Liquor | Crime File Pic (Photo Credit: Pixabay)

மே 19, பாப்பாரப்பட்டி (Dharmapuri News): தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உணம்பள்ளம் பிக்கம்பட்டி மலை கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 36). இவர், கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் நஞ்சப்பன் (வயது 40) என்பவர், கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். Sivaganga News: 15 வயது சிறுமியை சீரழித்த கொடூரம்.. ஆசிரியர் போக்சோவில் கைது..!

பல பெண்களுடன் தகாத உறவு:

இதனிடையே கஜேந்திரனுக்கும், நஞ்சப்பனுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பில் இறந்து பகை இருந்துள்ளது. கஜேந்திரன், நஞ்சப்பன் மனைவிடம் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி மது அருந்திவிட்டு நஞ்சப்பன், கஜேந்திரன் வீட்டுக்கு சென்று தகராறு செய்து வந்துள்ளார். அதேபோல், கஜேந்திரனுக்கும் பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

வெட்டிக் கொலை:

இந்நிலையில், வழக்கம் போல் நேற்று (மே 18) மாலை இருவருமே மது போதையில் இருந்துள்ளனர். அப்போது நஞ்சப்பன், கஜேந்திரன் வீட்டுக்கு சென்று 'உன்னால் தான் என் மனைவி என்னை விட்டு சென்றுவிட்டாள்', அதனால் உன்னுடைய மனைவியை அனுப்ப சொல்லி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த கஜேந்திரன் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து, நஞ்சப்பன் தலையில் 3 இடத்தில் பலமாக (Murder) வெட்டியுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசில் சரண்:

இதனையடுத்து, கஜேந்திரன் பாப்பாரப்பட்டி காவல்நிலையத்திற்கு சென்று அரிவாளுடன் சரணடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்து கிடந்த நஞ்சப்பனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கஜேந்திரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.