Gold Jewels (Photo Credit: Pixabay)

நவம்பர் 14, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல், உக்ரைன் - ரஷியா போர், மத்திய கிழக்கு பதற்றம் உலகளவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பங்குசந்தைகளில் தொடர் ஏற்ற-இறக்கம் நிலவி, ஒவ்வொரு நாட்டையும் நேரடியாக-மறைமுகமாக பாதித்து பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு கொட்டப்போகும் கனமழை.. ஆரஞ்சு & மஞ்சள் எச்சரிக்கை.. முழு விபரம் உள்ளே.! 

விண்ணைமுட்டும் தங்கம் விலை:

இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. அதன் மீதான வரி குறிக்கப்பட்டாலும், கடந்த 2014ம் ஆண்டில் ரூ.25 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்றளவில் 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட தங்கம், தற்போது ரூ.60 ஆயிரத்தை நெருங்கி ஏற்ற-இறக்கத்தை சந்தித்துள்ளது. தங்க நகையை வாங்க நினைப்போர் விலையேற்றத்தால் பரிதவித்து வந்தாலும், நுகர்வு அதிகரிப்பால் விலை உச்சத்திலேயே இருக்கிறது.

இன்றைய விலை (Gold Rate Today in Chennai):

சென்னையில் நேற்று (நவம்பர் 13) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,045 க்கும், சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.56,360 க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிலோ ரூ.1,01,000 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரேநாளில் தங்கத்தின் விலை ரூ.880 அளவு குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.55,480 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிராம் தங்கத்தின் விலை ரூ.110 குறைந்து, 6,935 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் சவரன் தங்கம் விலை ரூ.4,160 சரிந்து இருக்கிறது. வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு ரூ.99,000 க்கு விற்பனை செய்யபடுகிறது.