Sexual Abuse | Harassment Representational Picture (Photo Credit: Pixabay)

மார்ச் 23, திருவண்ணாமலை (Thiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் தாலுகாவில் நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் (வயது 18) ஒருவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் ஒரு பள்ளி மாணவியை (வயது 16) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், அவருடன் ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். Affair Couple Suicide: “காதலும் கைகூடவில்லை, கணவனும் பிடிக்கவில்லை” – முன்னாள் காதலருடன் இளம்பெண் தற்கொலை.. இரயில் முன்பாய்ந்து சோகம்.!

இவ்வாறு, தொடர்ந்து அந்த பள்ளி மாணவியை திருமணம் செய்துகொள்வதாக கூறி வற்புறுத்தி அழைத்துச் சென்று தாலி கட்டி உள்ளார். மேலும், இவர் பள்ளி மாணவியிடம் இது பற்றி வெளியே தெரிவித்தால் குடும்பத்தோடு கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்நிலையில், செய்யாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், பள்ளி மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்டு, கொலை மிரட்டல் விடுத்த அந்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.