![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/02/Railway-Track-Photo-Credit-Pixabay-380x214.jpg)
மார்ச் 23, திண்டுக்கல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள அரண்மணைபுதூரை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 26). இவர் கூலிவேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் தேன்மொழி (வயது 23). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு தேன்மொழிக்கு, வேறொருவருடன் திருமணம் நடந்தது. அவர்கள் இருவரும் கோயம்புத்தூரில் உள்ள போத்தனூரில் வசித்து வந்துள்ளனர். Ruturaj About Captaincy IPL 2024: “கேப்டன்ஷிப் பொறுப்பை நான் ரசித்து மகிழ்ந்தேன்” – வெற்றிக்குப்பின் சென்னை கேப்டன் ருதுராஜ் நெகிழ்ச்சி..
இந்நிலையில், தேன்மொழி தொடர்ந்து அவருடைய காதலன் மணிகண்டனுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கண்டித்ததால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 17-ஆம் தேதி தேன்மொழி, கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர், மணிகண்டனை கோயம்புத்தூருக்கு வரச்சொல்லி அவருடன் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்துள்ளார்.
இதனையடுத்து, இருவரும் ஒன்று சேர்ந்து வாழ முடியவில்லை என நினைத்து ஆழ்ந்த சோகத்தில் இருந்த இவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். ரெட்டியார்சத்திரம் அடுத்து உள்ள பலக்கனூத்து பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளனர். அவர்கள் இருவரும், பாலக்காட்டில் இருந்து வந்த வந்த இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.