Marriage (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 08, சென்னை (Chennai News): சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் 21 வயது பெண், அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவர் வசிக்கும் பகுதி அருகே வசிக்கும் கருணாகரன் என்பவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பாலியல் தொல்லை (Sexual Abuse) கொடுத்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கருணாகரன் மீது புளியந்தோப்பு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருணாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பிறகு, கருணாகரன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். Vellore: சீட்டு பணத்தை கேட்ட இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை - வேலூரில் பயங்கரம்.!

இளம்பெண்ணை பழிவாங்கிய வாலிபர்:

இந்நிலையில், இளம்பெண்ணின் பெற்றோர் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனை அறிந்த கருணாகரன், மாப்பிள்ளையின் செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொண்டு, பெண்ணின் நடத்தை குறித்து தவறாகவும், அவதூறாகவும் கூறியுள்ளார். இதனை அப்படியே நம்பிய மாப்பிள்ளை வீட்டார், பெண்ணின் வீட்டிற்கு தொடர்பு கொண்டு, எங்களுக்கு பெண்ணை பிடிக்கவில்லை, இந்த திருமணம் நடக்காது என தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் புகார்:

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர், நடந்த சம்பவம் குறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், கருணாகரன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.