நவம்பர் 10, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் 400 க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரவேற்பு பெற்ற பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் (Delhi Ganesh), நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில் இயற்கை எய்தினார். அவரின் மறைவு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்திய நிலையில், நடிகர் டெல்லி கணேஷின் மறைவுக்கு பல நடிகர்கள், நடிகைகள், மூத்த அரசியல் தலைவர்கள் நேரில் வந்து தங்களின் அஞ்சலியை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பிலும் டெல்லி கணேசனுடன் இருந்த நாட்கள் குறித்து மனம்திறந்து பேசினர்.
நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) ட்விட்:
என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி. Delhi Ganesh: தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி.!
நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் பதிவு:
என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி
— Rajinikanth (@rajinikanth) November 10, 2024
லொள்ளு சபா மனோகர் (Lollu Sabha Manokar):
அவரிடம் (டெல்லி கணேஷ்) யாருமே இயல்பாக பழகிவிடலாம். மிகவும் அன்பானவர். எந்த நபருடனும் இயல்பாக பழகி, அவர்களுக்கு கலை நுணுக்கத்தை கற்றுக்கொடுப்பார். தமிழ் திரையுலகத்திற்கு இவரின் மறைவு பேரிழப்பு. என்னிடம் எப்போதும் அன்பாக பழகுவார்" என பேசினார்.
நடிகர் சத்யராஜ் (Sathya Raj):
நாங்கள் அதிக படங்களில் நடித்து இருக்கிறோம். நாங்கள் படப்பிடிப்புகளில் சிறு குழந்தைகளை போல அரட்டையடிப்போம். இதனால் சில இயக்குனர்களும் வசனங்களில் கவனம் காண்பிக்காமல் அரட்டை அடிக்கிறீர்கள் என கேட்பார்கள். அவர் ஒரு சிறந்த நடிகர், நண்பர். அவரிடம் அரட்டை அடிப்பது மிகவும் பிடித்துப்போன ஒன்று.
நடிகர் மணிகண்டன்:
2010ம் ஆண்டு இதே வீட்டில் அவரிடம் குறும்படத்திற்காக கதை சொல்லி இருந்தேன். அவர் என்னை அன்புடன் அழைத்து, படத்தை நடித்துக்கொடுத்தார். எனக்காக பாதி தொகையில் நடித்துக்கொடுத்தார். சீனியர் நடிகர் என்ற ஆதிக்கம் இல்லாத, வாய்ப்பு தேடும் நடிகனைப்போல நடித்துக்கொடுத்தார். மிகவும் அன்பான மனிதர். இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட வேறொரு நபருக்கு தொடர்பு கொள்வதற்கு பதில் எனக்கு தொடர்பு கொண்டாலும், அன்புடன் பேசி இருந்தார். எனது திரை வாழ்க்கையின் தொடக்கத்தில் பல தவறுகளை சுட்டிக்காட்டி, அதனை திருத்தி மென்மேலும் வளர ஆசி வழங்கியவர்.
விசிக தலைவர் திருமாவளவன் (VCK Thirumavalavan):
தமிழ் திரையுலகில் மூத்த கலைஞர், நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து, தமிழ் மக்களின் பேராதரவை, நன்மதிப்பை பெற்றவர். திரையுலகில் அடியெடுத்து வைப்பதற்கு முன் வான் படையில் நாட்டை காக்கும் பணியில் அவர் செயல்பட்டு இருக்கிறார். அவரின் நடிப்பு வெகுவாக மக்களால் பேசப்பட்டது. எமது அலுவலகத்திற்கு வந்து எம்முடைய அரசியல் பணிகளை பாராட்டி ஊக்குவித்தவர், நான் எழுதிய புத்தகத்தை விரும்பி வாங்கிச் சென்றவர். 80 வயதில் இன்று அவர் காலமாகி இருக்கிறார். அவரின் மறைவு தமிழ் திரையுலகுக்கு, கலை உலகிற்கு நேர்ந்த பேரிழப்பு. Kasthuri Shankar: சர்ச்சை பேச்சு புகார் எதிரொலி.. நடிகை கஸ்தூரி தலைமறைவு?.. காவல்துறையினர் வலைவீச்சு.!
டெல்லி கணேஷின் நடிப்பில் பலரையும் கலங்கவைத்த ஒன்று:
RIP The Legend #DelhiGanesh Ayya💔 pic.twitter.com/vQFxrbAZH5
— OTT Trackers (@OTT_Trackers) November 10, 2024
அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Ma Subramanian):
டெல்லி கணேஷ் அவர்கள் 80 ஆண்டுகள் இந்த மண்ணில் வாழ்ந்து, சிறப்பான வாழ்க்கையை நடத்தி முடித்தவர். 400 தமிழ் & தெலுங்கு படங்களில் நடித்து, மிகசிறந்த குணசித்திர, நகைசுவை நடிகை என்ற வகையில், ஒட்டுமொத்த இந்தியரும் பாராட்டும் வகையிலான நடிகராக இருந்துள்ளார். சின்னத்திரையிலும் தனது முத்திரையை படைத்தவர், கலைஞரின் இளைஞன் படத்தில் நடித்து, கலைஞர் அவர்களால் பெரிதும் பாராட்டுப்பெற்றவர்.
இயக்குனர் வெற்றிமாறன் (Director Vetrimaran):
தமிழ் திரையுலகில் மிகவும் எளிமையான குணம் கொண்ட நடிகர் அவர். என்ன சொன்னாலும் தைரியமாக நீ செய், நான் உதவுகிறேன் என கூறுவார். எப்போதும் தனிப்பட்ட முறையிலும், தமிழ் சினிமாவுக்கும் தைரியமூட்டும் வகையிலேயே பேசுவார். அவரின் இழப்பு மிகப்பெரியது.
ஒய்.ஜி மகேந்திரன் (YG Mahendran):
டெல்லி கணேஷுக்கும் - எனக்கும் நட்பு தொடங்கி பல ஆண்டுகள் கடந்துவிட்டது. எவ்வுளவு ஆண்டுகளாக நாங்கள் பழகுகிறோம் என்பது கூட தெரியாது. என்னை அவர் எப்போது பார்த்தாலும், வயதில் நான் மூத்தனவாக இருந்தாலும், திரைத்துறையில் நீ சீனியர் என கூறுவார். படப்பிடிப்பு செல்லும்போது டெல்லி கணேஷ் இருந்தால், அது எப்போதும் கலகலப்புடன் இருக்கும். நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர், திறமையை மட்டும் நம்பி அவர் முன்னுக்கு வந்தவர். தான் நம்பிய கொள்கையை தைரியமாக விட்டுக்கொடுக்காமல் பேசுவார்.
நடிகர் ரமேஷ் கண்ணா (Ramesh Kanna):
டெல்லி கணேஷ் அவர்களின் இழப்பு மாபெரும் இழப்பு. சமீபகாலமாக மயில்சாமி, சித்ரா, மனோபாலா என எனது வட்டத்தில் இருந்த நண்பர்கள் பலரையும் இழந்துவிட்டேன். அதில் கணேஷும் சேர்ந்துவிட்டார். இதனால் நான் தனிமையில் இருப்பதே உணருகிறேன். நாங்கள் பல படங்களில் இணைந்து நடித்து இருக்கிறோம். எங்களின் கூட்டணியை பார்த்து பலரும் பாராட்டி இருகிறார்கள். டெல்லி கணேஷ் பல விஷயத்திற்கும் என்னை தொடர்பு கொண்டு பேசுவார். என்னுடன் நட்பாக பேசுவார். அவருடன் அன்பாக பேசும் நபர்களில் வையாபுரி, நானும் தான். இது மாபெரும் இழப்பு. அவரை நான் நாடகத்தில் இருந்து பார்த்து இருக்கிறேன். திரைப்படத்திற்கு முன்னதாகவே அவர் நடிப்பு எனக்கு தெரியும். திரை வருவதற்கு முன்னரே தனது நடிப்பு பாவனையால் கண்கலங்க வைப்பார். இன்று ஒட்டுமொத்தமாக கலங்கவைத்து சென்றுவிட்டார்.
நடிகர் விஜய் ட்விட் (TVK Vijay):
மூத்த நடிகர் டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடிகர் விஜய் இரங்கல்:
மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும்…
— TVK Vijay (@tvkvijayhq) November 10, 2024