Kasturi Shankar | Arrest File Pic (Photo Credit: @KasthuriShankar X / Pixabay)

நவம்பர் 10, சென்னை (Chennai News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்த கஸ்தூரி (Actress Kasthuri), கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் களமிறங்கி, தனது பல கருத்துக்களும் பதிவு செய்து வந்தார். இதனிடையே, சில நாட்களுக்கு முன்னதாக, பிராமணர் பாதுகாப்பு போராட்டம் ஒன்று சென்னையில் இந்து மக்கள் முன்னேற்ற கழகத்தின் அர்ஜுன் சம்பத் சார்பில் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின்போது பேசிய நடிகை கஸ்தூரி, தன்னை விமர்சிக்கும் நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் பலதரப்பட்ட கருத்துக்களை தெரிவித்தார். அப்போது, தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்தும் ஒருசில சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார். Delhi Ganesh: தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்; திரையுலகினர் அஞ்சலி.!

நடிகை தலைமறைவு?

இந்த விஷயம் தொடர்பான விஷயங்கள் செய்திகளாக வெளியாகி பெரும் எதிர்ப்பை சந்தித்தன. நடிகை கஸ்தூரிக்கு எதிராக சென்னை எழும்பூர் காவல் நிலையத்திலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கஸ்தூரி தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினாலும், புகாரின் பேரில் விசாரணைக்காக காவல்துறையினர் கஸ்தூரிக்கு நேரில் ஆஜராக சம்மன் வழங்கி இருந்த நிலையில், அவர் விசாரணைக்கு வரவில்லை, சம்மனையும் வாங்கவில்லை. இதனால் அவரின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டு இருந்துள்ளது, அவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தலைமறைவானதாக தெரியவரும் நிலையில், அதிகாரிகள் அவரைத் தேடி வலைவீசி இருக்கின்றனர்.

அதிகாரிகளை அலைக்கழிக்க வேண்டி கஸ்தூரி இவ்வாறு சம்மனை வாங்க தட்டிக்கழிப்பதாகவும் கூறப்படுகிறது.