Amazon Prime Video Logo (Photo Credits: Wikimedia Commons)

மே 13, சென்னை (Technology News): சமீப காலமாகவே பல ஓடிடி நிறுவனங்கள் தங்களது வருவாயை அதிகரிப்பதற்கும், எதிர்காலத்தில் தரமான சேவைகளை வழங்குவதற்கும் விளம்பர அடிப்படையிலான திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. விளம்பரங்கள் வேண்டாம் என்றால் கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிசையில் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளமும் இணைந்துள்ளது. Public Wifi Warning: பொது இடங்களில் வைஃபை பயன்படுத்துறீங்களா? கடும் எச்சரிக்கை.!

விளம்பரங்கள் இல்லாமல் படம் பார்க்க கூடுதல் கட்டணம் :

அமேசான் ஓடிடி தளத்தை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், வரும் ஜூன் 17ஆம் தேதி முதல் வீடியோக்களுக்கு நடுவே விளம்பரங்கள் வரும் என்ற புதிய அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுநாள் வரையிலும் விளம்பரங்கள் இல்லாமல் படம் பார்க்க முடிந்த நிலையில், விளம்பரங்கள் இல்லாமல் படங்களை பார்ப்பதற்கு தற்போது சந்தாவுடன் சேர்த்து கூடுதலாக ஆண்டுக்கு ரூ.699 மற்றும் மாதம் ரூ.129 செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அமேசான் பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூடுதல் கட்டண அறிவிப்பு :