அக்டோபர் 11, திருச்சி (TamilNadu News): திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, தேசிய நெடுஞ்சாலையில், தனியார் பால் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கே பாக்கெட்டுகளில் பால் நிரப்பப்பட்டு, பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். இந்த நிறுவனத்தில் பணியாளர்கள், காலை ஏழு மணி தொடங்கி இரவு 10 மணி வரையிலும் வேலை பார்ப்பதுண்டு. இரவில் ஒரு காவலாளி மட்டும் அங்கே பணியில் இருப்பார்.
இந்நிலையில் அந்த நிறுவனத்திலிருந்து நேற்று அதிகாலை பயங்கரமான சத்தம் எழுந்தது. அந்த நிறுவனத்தின் சுற்றுவட்டாரத்தில் கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் வரை இந்த சத்தம் கேட்டதால், கிராம மக்கள் மிகுந்த பதட்டம் அடைந்தனர்.
கிராம மக்கள் நேரில் சென்று பார்த்த போது, அந்த நிறுவனத்தில் மேற்கூறையாக இருந்த தகர ஷீட் முற்றிலும் சேதம் அடைந்திருந்தது. அதற்குப் பிறகு அங்கே அமோனியம் குளோரைடு (Ammonium Chloride) நிரப்பி வைக்கப்பட்டிருந்த பாய்லர் வெடித்தது தெரியவந்தது. இந்த விபத்தில் அந்த நிறுவனத்தில் இருந்த பல்வேறு பொருட்கள் முற்றிலும் நாசமானது. Best Smartphones Under Rs,30,000: அமேசான் ஆஃபரில் ரூ.30 ஆயிரத்திற்கு கீழ் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்: செல்போன் பிரியர்களே முந்துங்கள்.. விபரம் இதோ.!
அருகில் இருந்த மின்கம்பத்தில், மின்கம்பிகள் அறுந்து விழுந்து சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. தகவல் அறிந்தவுடன் மணப்பாறை காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பாய்லரில் இருந்து அமோனியம் குளோரைடு வெளியேறியதினால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் சுவாச பிரச்சனைகள் வருவதாக கூறினர். மேலும் அந்தப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் பரவியது.
அதிகாலைப் பொழுதில் பாய்லர் வெடித்ததால், அங்கே உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் இந்த விபத்தில் கிட்டத்தட்ட ஒரு கோடிக்கும் அதிகம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.