
ஜூலை 03, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இதனிடையே இன்று கபாலீஸ்வரர் கோவிலில் வெடிகுண்டு ஒன்று இருப்பதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் வெடித்துச்சிதறும் என மின்னஞ்சல் மூலமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. Sivagangai Custody Death: உயிரிழந்த அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய்.. தாய், சகோதரருக்கு நிதியுதவி.!
கபாலீஸ்வரர் கோவிலுக்குள் பரபரப்பு :
இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோவில் வளாகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதனால பக்தரிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், வெடிகுண்டு ஏதும் சிக்காததை அடுத்து மிரட்டல் மின்னஞ்சல் போலி என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். மேலும் மின்னஞ்சல் அனுப்பியது யார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.