மார்ச் 01, செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் (Attur, Chengalpattu) கிராமம், புவனேஸ்வரி நகர், பக்தவத்சலம் சாலை தெருவில் வசித்து வருபவர் டி. மனோகரன். இவர் கடந்த பல ஆண்டுகளாக முழுநேர மதுபோதைக்கு (Alcoholic) அடிமையாகி இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மதுபான பழக்கத்தை கைவிட்டு திருந்து வாழ தொடங்கியுள்ளார். இதற்கிடையில், அவர் மதுபானம் (Liquor) அருந்தும் பழக்கத்தை கைவிட்டு ஓராண்டுகள் ஆகிவிட்டதை (Gave up Liquor Habit) முன்னிட்டு, அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சார்பாக சுவரொட்டிகள் (Wall Poster) அங்குள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள்ளன.
இந்த விஷயம் தொடர்பாக மனோகரன் செய்தியாளர்களிடையே பேசுகையில், "நான் கடந்த 33 ஆண்டுகளாக குடித்து வந்தேன். குடியால் கடன்பட்டு வீட்டை இழந்தேன், கடன் தொல்லை, வீட்டில் சண்டை. நண்பர்கள் கூட என்னை மதிக்காமல் கடந்து சென்றார்கள். அன்றைய நாட்களில் இவை எனக்கு பெருமையாக இருந்தது. ஆனால், தாமதமாகத்தான் அனைத்தும் புரிந்தது. குடியால் நான் குடும்பத்தினருக்கு செய்த கொடுமைகள் ஏராளம். குடியை மறந்ததும் என்னுடன் பலரும் அன்புடன் பழகுகிறார்கள். Vitamin D: வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் தெரியுமா?.. அவற்றை தவிர்க்க இதுதான் வழிமுறை.!
எனது வீட்டில் அன்றைய நாட்களில் ரூ.500 கொடுத்து அரிசி வாங்கி வரச்சொன்னால், மொத்த பணத்தையும் குடித்தே அழித்தேன். நான் போதையில் இருந்தால் சண்டையிடுவேன் என பயந்து வீட்டில் அமைதியாக என்னிடம் கேட்டார்கள். நாளை அரிசி வரும் என தெரிவித்தேன். அவர் புரிந்துகொண்டார். நான் மதுபோதை பழக்கத்தால் குடும்பத்திற்கு பல இன்னல்களை வழங்கியுள்ளேன். எனது மனைவிக்கு அவரின் குடும்பத்தினர் வழங்கிய சேலைகளை கூட விட்டுவைக்காமல் விற்பனை செய்து சாராயம் குடித்துள்ளேன்.
எனது மூத்த மகனின் மகன், அதாவது பேரன் என்னை பார்த்து "குடிகார தாத்தா ஏன் குடித்துவிட்டு சண்டை செய்கிறாய், பேசாமல் படு" என சத்தமிட்டான். என்னை செருப்பால் அடித்தது போன்று இருந்தது. அதனால் நானே என்னை உறுதி செய்து மதுபானத்தை விட முடிவெடுத்து, குடியை விடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்து தினமும் குடியை விட யோசனை செய்து விட்டேன். ஒரு டைரி வாங்கி அதற்கானதை எழுதவும் தொடங்கினேன். குடிக்க நியாபகம் வந்தால், அதற்கு மாற்றாக கஞ்சி போன்றவற்றை குடித்து எண்ணத்தை மாற்றினேன்.
என்னைப்பொறுத்த வரையில் மதுபான ஒழிப்பு என்பது சாத்தியம் இல்லாதது. ஆனால், நாம் பழக்கத்தை விட்டோம் என்றால் கட்டாயம் கடையை அவர்களே மூடிவிடுவார்கள். என்பது தான் நிச்சயமான உண்மை. மதுபான பழக்கத்தை தவிர்ப்போம். நல்வாழ்வு வாழ்வோம்" என கூறினார்.
சுவரொட்டியில் இருந்த வாசகங்கள்:
குடியால கெட்டதடா குடும்பங்கள் பல!
அதை நீ மறந்தால் வாழ்ந்திடலாம் ஆண்டுகள் பல!
மதுவை நீ குடித்தால் மரணம் உன்னை அழைக்கும்!
அதை நீ மறந்தால் உன் வாழ்க்கை உயரும்!
மது வீட்டிற்கும், நாட்டிற்கும், உடல் நலத்திற்கும் கேடுதரும்!