Chengalpattu Women Died Removal Surgery Copper T

ஜனவரி 20, மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (Maduranthakam, Chengalpattu), சிலாவட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஜானகிராமன். இவரின் மனைவி திவ்யா. தம்பதியில் திவ்யாவுக்கு கருத்தடை சாதனமான காப்பர் டி (Contraceptive device Copper T) பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று காலை மதுராந்தகத்தில் உள்ள கொளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கருத்தடை சாதனத்தை அகற்ற (Copper T Removal Surgery) வேண்டி சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.

காலை 7 மணியளவில் அறுவை சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட திவ்யா குறித்து காலை 11 மணி வரையில் மருத்துவமனை நிர்வாகம் எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை.

மருத்துவர்கள் தொடர்ந்து பரபரப்புடன் இருந்து வந்ததால் உறவினர்களும் அச்சமடைந்த நிலையில், மருத்துவர்களிடம் சண்டையிட்டபோது திவ்யா நெஞ்சு வலியால் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். AIADMK Sellur K Raju Speech: நாம் யாரின் வாரிசு?.. கலகலப்பாக பேசி காட்டமான செல்லூர் ராஜு.. அவர்களை எதைக்கொண்டு அடிக்கலாம்? என கேள்வி.!

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் திவ்யா உயிரிழந்துவிட்டதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் அவர்கள் அங்கிருந்து களைந்து சென்றனர்.

காப்பர் டி (Copper T Device) கருத்தடை சாதனம் என்பது அரசால் பரிந்துரை செய்யப்பட்ட கருத்தடை சிகிச்சை ஆகும். இதனை அகற்றும் முயற்சியின் போது பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 20, 2023 10:39 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).