
ஜூன் 28, சென்னை (Chennai News): சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள ஆபரேஷன்ஸ், மெயிண்டனன்ஸ் சூப்பர்வைசர் பணிகளை நிரப்ப வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்வாகும் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சூப்பர்வைசர் பணி தொடர்பான விவரங்களை பின்வருமாறு காணலாம். Gold Rate Today: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ.!
மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணி விபரங்கள் :
பணி : மெயின்டனன்ஸ், ஆபரேஷன்ஸ் சூப்பர்வைசர்
கல்வித்தகுதி : டிப்ளமோ, ஐடி, எலக்ட்ரானிக்ஸ் உள்ள பிரிவுகளின் கீழ் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ முடித்தவர்கள், தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ முடித்தவர்கள்
தேர்வு முறை : சான்றிதழ் சரி பார்ப்பு மற்றும் தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். ரிசர்வேஷன் மற்றும் மெரிட் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
வயதுவரம்பு : 18 முதல் 33 வரை
சம்பளம் : மாதம் ரூ.26,600
நேர்காணல் தேதி : ஜூலை 2, ஜூலை 3, ஜூலை 4,ஜூலை 7, ஜூலை 8, ஜூலை 9
நேர்காணல் நடைபெறும் இடம் : இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி, CIT கேம்பஸ், தரமணி, சென்னை.
மேலும் விபரங்களுக்கு : https://backend.delhimetrorail.com/documents/8868/Advt-Chennai-Metro-Walkin-Screening-TAMIL.pdf