Tomorrow Weather (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 30, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில், தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் (Tamilnadu Weather Alert) பொதுவாக ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தஞ்சாவூர், விருதுநகர், தேனி, மதுரை, கடலூர், ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தி வேலூரில் 38.5 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 20.2 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரையில், குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

30ஆம் தேதியை தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

1ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

ஒன்றாம் தேதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவாரூர்: கந்துவட்டிக்கொடுமை.. பெண் மீது டிராக்டர் ஏற்றிப் படுகொலை.. நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்.! 

2ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

இரண்டாம் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Perambalur Rains Cloud File Pic (Photo Credit: LatestLY)
Perambalur Rains Cloud (Photo Credit: LatestLY)

3ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

மூன்றாம் தேதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

4ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

நான்காம் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Coonoor Landslides: தொடர் மழையால் சோகம்.. நிலச்சரிவில் சிக்கி ஆசிரியை மரணம்; உயிர்தப்பிய கணவர், மகள்கள்.! நீலகிரியில் சோகம்.! 

5ம் தேதி மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

ஐந்தாம் தேதி மற்றும் ஆறாம் தேதியில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யலாம். சென்னை மற்றும் அதன் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு & எச்சரிக்கையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 30ஆம் தேதி முதல் ஒன்றாம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, குமரிக்கடல், மத்திய மேற்குவங்கக்கடல், கேரள- கர்நாடக கடலோரப்பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று 35 கிலோமீட்டர் வேகம் முதல் 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதாலும், இடையிடையே 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதாலும், அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.