Tomorrow weather (Photo Credit: LatestLY)

டிசம்பர் 27, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைப் பொறுத்தவரையில், வடதமிழகத்தில்‌ வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. வடதமிழகத்தில்‌ அநேக இடங்களிலும்‌, தென்தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, மழை பெய்துள்ளது. புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ லேசான மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்‌ திருத்தணியில் 8 செமீ மழையும், பெரம்பூரில் 6 செமீ மழையும், பேசின்பிரிட்ஜ் பகுதியில் 5 செமீ மழையும், சென்னை அண்ணாநகர், பள்ளிப்பட்டு, கோடநாடு பகுதிகளில் 5 செமீ மழையும் பெய்துள்ளது. சென்னை நகரில் தண்டையார்பேட்டை, கொளத்தூர், அயப்பாக்கம், திருவாலங்காடு, எம்.ஜி.ஆர் நகர், பூந்தமல்லி, அம்பத்தூர், மணலி, வடபழனி, திருவள்ளூர், மாதவரம், திருவெற்றியூர் உட்பட பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில்‌ கன்னியாகுமரியில் 33.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக 18.4 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இன்றைய வானிலை (Today Weater):

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும்‌ எச்சரிக்கையில், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 27-12-2024 அன்று தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

நாளைய வானிலை (Tomorrow Weather):

28-12-2024 மற்றும்‌ 29-12-2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகாலை வேளையில்‌ ஒருசில இடங்களில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. 30-12-2024 மற்றும்‌ 31-12-2024 ஆகிய தேதிகளில் தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 01-01-2025 அன்று தென்தமிழகத்தில்‌ ஒருசில இடங்களிலும்‌, வடதமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. 02-01-2025 அன்று தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களிலும்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளிலும்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. Parangimalai Murder Case: பரங்கிமலை கல்லூரி மாணவி கொலை விவகாரம்; சதிஷ் குற்றவாளி என அறிவிப்பு..! 

சென்னை (Chennai Weather) மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு (Chennai Weather Forecast):

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌, இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌ இருக்கக்கூடும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌, லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகாலை வேளையில்‌ லேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும்‌, குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்காக எச்சரிக்கை ஏதும் இல்லை.