ஆகஸ்ட் 20, மண்டல வானிலை ஆய்வு மையம், சென்னை (Regional Meteorological Center, Chennai): சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, "கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மணாலி, உத்தண்டி, நீலகிரி பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழையும், சோழிங்கநல்லூர், நீலகிரி பந்தநல்லூர், திருவள்ளூர் செங்குன்றம் பகுதியில் இரண்டு சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கையை பொறுத்தமட்டில், மேற்குத்திசை காற்று வேகமாறுபாடு காரணமாக 20-ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக, 21-ம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 22-ம் தேதியை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். Kanguva Surya 6 Pack: கங்குவா படத்திற்காக ஓயாது உழைக்கும் நடிகர் சூர்யா; மிரட்டலான 6 பேக் கிளிக்ஸ் வைரல்.!
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23-ம் தேதியை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானமேகம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். அதிகபட்ச வெப்ப நிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 20-ம் தேதியான இன்று, தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள தென்தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா, அதனை ஒட்டி உள்ள குமரிக்கடல் பகுதியில் சூறாவளிக்காற்று 65 கிலோமீட்டர் வேகம் வரை வீசும். தெற்கு இலங்கை கடலோர பகுதி, அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என எச்சரிக்கப்படுகிறது.