பாதிக்கப்பட்டவர் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட நிகழ்வு (Photo Credit: Facebook)

ஜூலை 28, வடபழனி (Chennai News): சென்னையில் கஞ்சா உட்பட போதைப்பொருட்கள் பழக்கம் அதிகரித்து இருக்கிறது. இதனை உட்கொள்ளும் இளைஞகர்கள் செய்யும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த காவல் துறையினர் கஞ்சா வியாபாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும், அவை தொடர்ந்து வருகிறது.

திரைப்பட பாணியில் கஞ்சாவை விற்பனை செய்ய பல குழுக்கள் இருக்கும் நிலையில், வெளியுலகுக்கு தெரியும் ஒருகுழு கைது செய்யப்பட்டதும், திரைமறைவில் பணியாற்றும் மற்றொரு குழு மீண்டும் போதைப்பொருட்கள் புழக்கத்திற்கு வழிவகை செய்கிறது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள வடபழனி, புலியூர் ஹவுசிங் காலனி குடியிருப்பு பகுதியில் கஞ்சா குடிக்கிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து இருக்கிறது. தினமும் சுவர் ஏறிக்குதித்து குடியிருப்பு பகுதிக்குள் வரும் கஞ்சா ஆசாமிகள், கஞ்சா புகைத்து பொதுமக்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். Retired Major David Grusch: 2019ல் நடத்த விபத்தில் ஏலியன் உடல் பாகங்கள் மீட்பு? – முன்னாள் அமெரிக்க விமானப்படை அதிகாரி பரபரப்பு குற்றசாட்டு.!

இரவு நேரங்களில் கார் உட்பட இருசக்கர வாகனங்களின் பேட்டரியை திருடுவது, கார் உட்பட பிற நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடியை சேதப்படுவது என அட்டகாசம் தொடர்ந்து வந்துள்ளது. நேற்று ஒரேநாளில் 6 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடியிருப்பு வாசிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர். கஞ்சா போதை ஆசாமிகள் சில நேரம் பயங்கர ஆயுதத்துடன் மிரட்டல் சம்பவத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மக்கள் அச்சப்பட்டு வாழும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.