ஏப்ரல் 21, பூந்தமல்லி (Tamilnadu News): கோயம்புத்தூர் (Coimbatore) மாவட்டத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், கடந்த ஆண்டு அக். மாதம் 23ம் தேதி அதிகாலை கார் வெடித்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் காரில் வெடிகுண்டு இருந்து வெடித்தது உறுதியாக, உக்கடம் பகுதியை சேர்ந்த ஜாமோஷா முபின் (Jamesha Mubin) என்பவர் உயிரிழந்தது உறுதியானது. இந்த விஷயம் தொடர்பாக முதலில் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர்.
விசாரணைக்கு பின்னர் முபினோடு தொடர்பில் இருந்ததாக முகமது அசாருதீன், அப்சர் கான், முகமது தள்ளா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து, வழக்கில் தீவிர தொடர்பு குறித்த விஷயம் உறுதியானதால், தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ காலத்தில் இறங்கி கூடுதலாக 5 பேரை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட 11 நபர்களையும் தனித்தனியே காவலில் எடுத்து விசாரணை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள், இவர்கள் சந்தித்தாக கூறப்பட்ட கோயம்புத்தூர், சத்தியமங்கலம், குன்னூர் போன்ற பகுதிகளுக்கும் விரைந்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து முபினின் இல்லத்தில் நடைபெற்ற சோதனையில், அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது அம்பலமானது. Air India Pilot: பெண் தோழியுடன் விமானத்தில் ஜாலி ட்ரிப்.. விமானிகள் அறைக்குள் அனுமதித்த விமானியால் சர்ச்சை.!
இவர்கள் தமிழ்நாடு முழுவதும் பல நாசவேலைகளுக்கு திட்டமிட்டு இருந்த நிலையில், கோவிகளில் தற்கொலை படை தாக்குதலுக்கு தயாராகி வந்ததும் உறுதியானது. அதற்கான வெடிபொருட்கள் முபினின் இல்லத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. சதிச்செயலை அரங்கேற்ற முபினின் தலைமையில் குன்னூர், சத்தியமங்கலம் காட்டு பகுதிகளில் பிரத்தியேக கூட்டமும் நடைபெற்று வந்துள்ளது.
இந்த தகவல்களை சேகரித்த என்.ஐ.ஏ அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தயார் செய்து சென்னை பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அதனை தாக்கல் செய்தனர். அதன்படி, ஜமேஷா முபின் தொடர்பாக பல பரபரப்பு தகவல் அம்பலமானது. கோவை குண்டுவெடிப்பை பொறுத்தமட்டில் அது சிலிண்டர் வெடிப்பு என கூறப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ அறிக்கையில் அவை குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் உபயோகம் செய்யப்பட்டது ஐ.இ.டி எனப்படும் அதி சக்திவாய்ந்த வெடிகுண்டு என்பதும் கூறப்பட்டுள்ளது. முபின் திட்டமிட்டு தாக்குதல் நடத்த சென்ற சூழலில் தான், அவர் உருவாக்கிய வெடிகுண்டால் அவரே உயிரிழந்துள்ளார். இவர் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தாக்குதல் நடத்த உறுதிபூண்டு இருக்கிறார். முதலில் கோவையை மையமாக வைத்து, மக்கள் கூடும் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட செயல்பாடுகள் தொடர்பான குறிப்பையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் முபினின் வீட்டில் இருந்து கைப்பற்றி இருக்கின்றனர். முபினின் உறவினரான அசாருதீன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பென்ட்ரைவ் படி, அவர் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஐ.எஸ் அமைப்புகளின் நிர்வாகிகளின் பேச்சுக்களை விரும்பி கேட்டு வந்ததும் உறுதியானது. இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் பண்டிகை தாக்குதலில் தொடர்பிருக்கும் மதகுருவின் விடியோவும் பார்த்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பேர் அதிர்ச்சியாக, கோவை தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்பதை, அந்த அமைப்பின் ஐ.எஸ்.கே.பி இதழின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அம்பலமாகியுள்ளது. முபினுக்கு கூட்டாளிகளாக முகமது தாலுகா கார் வாங்கி கொடுத்துள்ளார். பெரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர் வெடிபொருட்களை நிரப்பவும் உறுதி செய்திருக்கின்றனர். இவர்களின் மீது உபா சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.