Coimbatore Acid Attack Issue Accuse | Peoples Attacked Accuse (Photo Credit: Twitter)

மார்ச் 23 , நீதிமன்ற வளாகம் (Coimbatore News): கோயம்புத்தூர் (Coimbatore) மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த குற்றவியல் (Coimbatore Court) நீதிமன்ற வளாகத்தில், இன்று விவாகரத்து (Divorce Case) தொடர்பான வழக்குக்கு கணவன் - மனைவி (Husband Wife) வருகை தந்திருந்தனர். இதில், மனைவியின் மீது கணவர் (Husband Doubts Wife) சந்தேகம் எண்ணம் கொண்டு செயல்பட்டு வந்ததால் விவாகரத்துக்கு விண்ணப்பித்ததாக தெரியவருகிறது.

இந்த நிலையில், நீதிமன்ற (Court Campus) வளாகத்தில் இருந்த மனைவிக்கு அருகே சென்ற கணவர், சற்றும் எதிர்பாராத நேரத்தில் தான் தண்ணீர் பாட்டில் போல கொண்டு வந்திருந்ததை திறந்து மனைவியின் மீது ஊற்றியுள்ளார். இதனால் அவரின் முகம் (Acid Attack) உட்பட உடல் வெந்து அலறியுள்ளார். Rahul Gandhi: ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பு விவகாரம்; இந்தியா முழுவதும் தொடங்கியது போராட்டம்.!

அதன்பின்னரே அவர் ஆசிட் கொண்டு வந்து தாக்குதல் நடத்திய விபரம் அம்பலமானது. இந்த ஆசிட் தாக்குதலில் சம்பந்தப்பட்ட பெண்மணி, 5 பொதுமக்கள், 2 வழக்கறிஞர்கள் ஆகியோரின் மீதும் திரவம் பட்டதால், அவர்களும் பாதிக்கப்பட்டனர். பெண்மணி ஆசிட் தாக்குதலில் 80 % காயமடைந்தார்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பிற வழக்கறிஞர்கள், ஆத்திரத்தில் அந்த நபரை அடித்து நொறுக்கினர். அவசர ஊர்தி மூலமாக பெண்மணி கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிகழ்வின்போது எடுக்கப்பட்ட வீடியோ

கைது செய்யப்பட்ட குற்றவாளி