Died Victim Subash Krishnan | Railway Track (Photo Credit: Unplash)

மே 31, விளாங்குடி (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள விளாங்குடி இரயில்வே கேட் அருகே, 35 வயதுடைய நபரின் சடலம் இரயிலில் அடிபட்டு கிடந்துள்ளது என மதுரை இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இரயிலில் அடிபட்டு இருந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், இரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் யார்? அவர் உண்மையில் தற்கொலை செய்துகொண்டாரா? கொலை செய்யப்பட்டு உடல் தண்டவாளத்தில் வீசி இரயிலில் சிக்கி சின்னாபின்னமானதா? என விசாரணை நடந்துள்ளது.

விசாரணையில், சடலமாக மீட்கப்ட்டவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நால்வர் நகரில் வசித்து வரும் பாலன் நாயரின் மகன் சுபாஷ் கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. இவர் தனியார் கல்வியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்துள்ளார். மதுரை மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த பெண்மணி முத்துலட்சுமி. Accident: பயணிகள் பேருந்து தலைகுப்பற கவிழ்ந்து விபத்து; ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பகுதியில் விபரீதம்.!

தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து மகன், மகள் உள்ளனர். இதனிடையே, தம்பதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்து வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விவாகரத்து வழக்கு காரணமாக சுபாஷ் கிருஷ்ணன் மனஉளைச்சலோடு காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று கோவையில் இருந்து மதுரைக்கு காரில் வந்தவர், வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு, மனைவியின் நகைகளை அவரின் வீட்டில் ஒப்படைத்தார். பின் மனஉளைச்சலோடு அங்கிருந்து புறப்பட்டு சென்றவர், தற்கொலை செய்ய முடிவெடுத்து சென்னையில் இரண்டு மதுரை வந்த தேஜஸ் அதிவிரைவு சிறப்பு இரயில் முன்பு பாய்ந்து உயிரை துறந்தார்.

இரயில் சக்கரத்தில் அவரின் உடல் சிக்கி 2 துண்டாக பிரிந்து உயிர் பறிபோனது. அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அவரின் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.