Cuddalore AIADMK Administrator Pushpanadan | Death File Pic (Photo Credit: @TNRepublicnews X / Pixabay)

ஜூலை 01, வண்டிப்பாளையம் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிப்பாளையம், ஆளை காலனி பகுதியில் வசித்து வருபவர் புஷ்பநாதன். இவர் அப்பகுதியில் இறைச்சி கடை ஒன்றை நடத்தி வருகிறார். மேலும், அதிமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்து வரும் புஷ்பநாதன், முன்னாள் கடலூர் நகராட்சி கவுன்சிலரும் ஆவார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்த புஷ்பநாதனை, கும்பல் ஒன்று திடீரென வழிமறித்தது.

அதிமுக நிர்வாகி கொடூர கொலை:

இந்த சம்பவத்தில் பயங்கர ஆயுதத்துடன் கும்பல் வழிமறித்த காரணத்தால், தன்னை கொலை செய்யப்போகிறார்கள் என்பதை நன்கு உணர்ந்தவர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தார். ஆனால், அவரை சுற்றிவளைத்த கும்பல் சரமாரியாக வெட்டிக்கொன்றது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து 3 தனிப்படைகளை உடனடியாக அமைத்து விசாரணையை முன்னெடுத்தனர். Family Drowned into Flash Flood: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 4 குழந்தைகள்.. இன்பச்சுற்றுலாவில் ஐவர் பலி.. நெஞ்சை பதறவைக்கும் இறுதி நிமிட வீடியோ.! 

உறவினர்கள் சாலை மறியல்:

இதனிடையே, புஷ்பநாதனின் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து கைதுசெய்யக்கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு சூழல் உண்டாகிவிட, கூடுதல் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக காவல் துறையினர் உறுதி அளித்ததன்பேரில், போராட்டக்கார்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மூவர் கும்பல் கைது:

அதிகாரிகளின் விசாரணையில் அதிர்ச்சி திருப்பமாக, அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேதாஜி, அஜய், சந்தோஷ் ஆகிய நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் தமிழ்நாடு ஆளுங்கட்சியில் இடம்பெற்றுள்ள பிரபல கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. காரில் சென்று ஆடு திருடுவதை வழக்கமாக கொண்ட இவர்கள் மூவரும், திருட்டு ஆடுகளை புஷ்பநாதனுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதனை வைத்து புஷ்பநாதனும் தனது தொழிலை பெருக்கி இருக்கிறார். TN Weather Update: அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு.! 

விசாரணையில் அதிர்ச்சி தகவல்:

இவ்வாறான செயல் தொடர்ந்த நிலையில், "பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்" என்ற பழமொழிக்கேற்ப, கடந்த ஆண்டு தேவனாம்பட்டினம் பகுதியில் வசித்து வரும் திமுக பிரமுகரின் வீட்டில் இருந்த 8 ஆடுகளை கும்பல் திருடி சிக்கிக்கொண்டுள்ளது. இந்த விஷயம் குறித்த விசாரணைக்குப்பின்னர் நேதாஜி, அஜய் உட்பட மூவர் கும்பலை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்தவாறு புஷ்பநாதனுக்கு தூது அனுப்பிய கும்பல், ஜாமினில் எடுத்து காரையும் மீட்டுத்தர கோரிக்கை வைத்துள்ளது.

போதையில் நடந்த பயங்கரம்:

ஆனால், புஷ்பநாதனோ இவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட காரணத்தால், இளைஞர்கள் மூவரும் சிறையில் இருந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தவர்கள், புஷ்பநாதனிடம் ஜாமினில் ஏன் எடுக்கவில்லை என வாதம் செய்துள்ளனர். இந்த வாதம் இருதரப்பு முன்விரோதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த நபர்களுக்கு கடும் விரக்தி ஏற்பட, புஷ்பநாதனை இவர்கள் கொலை செய்ய திட்டமிட்டு போதையிலேயே கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.

கொலை சம்பவத்தால் கொதித்துப்போன கும்பல் நேதாஜி மற்றும் அஜயின் வீட்டுக்குள் புகுந்து சூறையாடி இருக்கிறது. தொடர் பதற்ற சம்பவத்தால் அப்பகுதியில் காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.